காட்சி 5
காட்சி 5
45 பகுதிகளில்
இடம் :- மல்லயப்பர் மாளிகை மல் :- என்ன சஞ்சீவி......வா...வா நம்ம வீட்டுக்கு அதிகமாக வர்றதில்லே...... சஞ் :- வராமல் என்ன...வைத்தியர்கள் அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடிய நிலமை கூடாது என்பது தான். மல் :- நம்ம வீட்டுக்கு வியாதி பார்க்கத்தானே வரணும்? விருந்து சாப்பிடவும் வாலாம் சஞ்சீவி! சஞ் :- வாலாம்...நாங்கள் சாப்பிட்றதும்...... மல் :- ஆ...... சஞ் :- நாங்க சாப்பிட்றதும் ஒங்க சாப்பாடு தானே. மல் :- சஞ்சீவி! நீ ரொம்பவும் நன்றி உள்ளவன்தான். ஆனால்...அந்த ஒரு விஷயத்தில் தான் உன்னே நம்ப முடியவில்லை. சஞ் :- எதில்...? வைத்தியத்திலா? மல் :- ஹா...ஹூம்...அதில்தான் நீ அசகாய சூரனாச்சே! அந்த உயிரை மட்டும் என்னிடம் கொடுத்து விடு. என் கவலை தீர்ந்து விடும். சஞ் :- கவலைப்படாதீங்க! உயிர் இருந்தால் அல்லவா கொடுப்பதற்கு? மல் :- பிறகு யாரிடம் இருக்கிறது? சஞ் :- அது...ரொம்பவும் இரகசியமாக இருக்கு! சங்கேதப் படாதீர்கள்! சஞ்சலமே தேவை இல்லை! சஞ்சீவியை நம்புங்கோ......! மல் :- டேய்...எங்கடா குமரன்? மாடு மேய்க்க போயிட்டானு?