காட்சி 3

காட்சி 3

45 பகுதிகளில்

இடம் :- மல்லயப்பர் மாளிகை மல்ல :- வா...சஞ்சீவி! ஹூம்...என்ன விசேஷம்...... சஞ் :- ஜமீன்தாரை பார்த்து விட்டுப் போகலாம்னு வந்தேன்...சும்மா வருவேனா? மல்ல :- இவங்க யாரு? சஞ் :- இவங்க எனக்கு தெரிஞ்சவங்க! உங்க வீட்டிலே ஏதாவது வேலை கிடைக்குமான்னு...... மல்ல :- ஹூம் எனக்கும் ஒரு வேலைக்காரி தேவைதான்! டேய் அண்ணாமலை! இவங்களை அம்மாகிட்டே அழைச்சிக்கிட்டுப் போ! (வேலைக்காரனை கூட்டிச் செல்லுகிறான்) மல்ல :- ஹூம்......அப்புறம்...... (காட்சி மாறுகிறது) ஞானம் : (ஜமீன்தார் மனைவி) மீனு...மீனு... மீனு : (மல்லயப்பரின் தங்கை) என்ன அண்ணி? ஞா :- நம்ம வீட்டுக்கு புதுவேலைக்காரி வந்திருக்காங்க. [நாராயணியைப் பார்த்து] நாராயணி! வீட்டை ஒழுங்காக பார்த்துக்கொள். உன் வீடு மாதிரி. நாரா :- சந்தேகமா? இனிமேல் இது என் வீடுதான்! ஞா :- மீனு......வேலைகளைச் சொல். (ஞானம் போன பிறகு) மீனு :- வாங்க! வந்ததும் வராததுமா உங்களுக்கு என்ன வேலை? நாரா : ஆமா...நீங்க ஜமீன்தாருக்கு என்ன வேணும்? மீனு :- தங்கை! (நாட்கள் பல கடந்தன) (குமரனின் தாய் தண்ணீர்க் குடம் தூக்கி வருகிறாள். குமரன் குறுக்கொடிய—வியர்வை சிந்த விறகு வெட்டி இருக்கிறான். இளைத்து உட்காருகிறான்—இட்லி வருகிறது—இன்பம் அடைகிறான். அடுத்து ஆரஞ்சுப்பழம் வருகிறது—ஆறுதல் பெறுகிறான். பாட்டாளி குமரனுக்கு பால் வருகிறது—பரவசம் அடைகிறான். இவ்வாறாக மீனு தனது காதல் சுவையுள்ள பொருள்கள் மூலம் குமரனுக்கு அறிவித்தாள். இறுதியாக இருவரும் சேர்ந்து அந்த அழகிய பூஞ்செடித் தொட்டியை புன்முறுவல் பூத்த முகத்துடன் தூக்கினார்கள்.) (குமரன் பெட்டி வண்டியை இழுத்து வரும்போது தனது தாய் தண்ணீர்க் குடம் தூக்கி வருவதைக் கண்டு உதவிக்கு ஓடுகிறான்.) நாரா : இதை நீ கண்ணுலேயா பார்க்கணும்? ஞா :- அடியே நாராயணி! அங்கே என்னடி மகனோடே குலாவுறே? சீக்கிரம் வாடி! மல் :- டேய்...எங்கடா அந்த சோம்பேறி? இன்னுமா ஸ்டேஷன்லே இருந்து வர்றான்? (குமரன் வண்டியை இழுத்து வருகிறான்—தண்ணீர் குடத்துடன்) மல் :- தண்டச்சோறு! என்னடா தாமதம்? எதுடா குடம்? கும :- அம்மா தண்ணி கொண்டு வந்தாங்க...உதவியா மல் :- சீ...! நீ இங்கே வேலை பார்க்கிற வரைக்கும் வேலைக்காரன்—வேலைக்காரன்தான்! அம்மா...பிள்ளை பாசமெல்லாம் பேசினே...சோத்திலே மண்ணு விழுந்து விடும். ஜாக்கிரதை! ஹூம் பெட்டியை கொண்டுபோயி அடுக்குடா...அடுக்குடான்னு { குமரனை மல்லயப்பன் வாட்டுகிறான்—ஒரு புறம் நாராயணியை ஞானம் கண்டிக்கிறாள்—மறுபுறம் } ஞா : வெட்கம் கெட்ட நாயே...அவ்வளவு அலட்சியமென்னடி? ஒரு குடம் தூக்கிவர உடம்பு இடம் கொடுக்கலையோ பாவம் புது இல்...துண்டு போச்சி...... நாரா :- குடத்தை நான் உடைக்கலே...குடத்தை உருட்டி விட்டது...... ஞா :- சீ...தப்பு பண்ணறது பண்ணிவிட்டு தவறை அவர் தலையிலா தூக்கிப் போடுறே? (என்று நாராயணியை ஞானம் அடிக்கிறாள். நாராயணி மறு வினாடி மாடியிலிருந்து கீழே உருட்டி விடப்படுகிறாள்.) (இதைக் கண்ட குமரன் பெட்டியை கீழே போட்டுவிட்டு ஓடி வருகிறான்) கும :- அம்மா...... நாரா :- எனக்கு ஒன்றும் இல்லே...நீ போயி வேலையைப்பாரு! மல் :- டேய்...அங்கே என்னடா கூத்தாடுறே...வாடா இங்கே...பெட்டியை இறடா...சீக்கிரம் இறடா... (குமரன் பெட்டியை இறக்கிறான்) மல் :- (கண்ணாடிச் சாமான்கள் உடைந்திருப்பதைக் கண்டு . கடுஞ்சினம் கொண்டு) என்னடா இது? என்னடா உடைச்சே? கும :- அம்மா...... மல் :- அம்மா. (ஆணவத்துடன்) நீ இங்கு அடிமை வேலைக்கு வந்தாய்! அம்மா—மகன் என்ற பாசம் கூடாதுன்னு எத்தனை தடவையடா சொல்றது? (மல்லயப்பர் குமரனை சவுக்கால் அடிக்கிறார். நாராயணி துடிக்கிறாள், மல்லயப்பரின் கை சுளுக்கி விடுகிறது) மல் :- டேய். போயி வைத்தியரை கூட்டிக் கிட்டு வாடா...போடா சீக்கிரம்...... (குமரன் வைத்தியரிடம் போகிறான்.)