உழவன்—தொகையறா

களஞ்சிய வரிசை 14·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

தொகையறா

உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் முழுமோசக்காரன் தானே முடிவிலே நாசமாவான்

பாட்டு

அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே

தொகையறா

வேஷம் கண்டு மயங்கியே வீணாக ஆசைக்கொண்டு மோசமும் போன பின்னால் மன வேதனையடைவதாலே லாபமென்ன?

பாட்டு

பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தான் வந்திடும்—அதை அடிச்சே கொல்ல நேர்ந்திடும்