ராஜகுமாரி

களஞ்சிய வரிசை 15·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

காதல் பலியாகி நீயும் தியாகத்தின் சின்னமாய் நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்! காண்பவர் யாருமே பெண்களின் தீரமே உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகியே! தீயோன்மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே தீராத துயரம் கண்டாய் வீண்பழி மேவினாய்! தேசம் தன்னையே பாதுகாக்கவே நாதனைக் கொன்றுமே நீதி தனை நாட்டினாய்! நாட்டுக்கே பாடம் தன்னை போதிக்கும் தியாகச்சின்னம் நாளும் உன கல்லறை மீதில் நாங்களும் கண்ணீர் சிந்தி மலர்கள் தூவியே மானசீகமாய்! அன்பு செய்வதன்றியே கைமாறு வேறில்லையே!