பார்த்திபன்—மந்திரிகுமாரி

களஞ்சிய வரிசை 13·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

பார்த்திபன்

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்

அமுதவல்லி

ஆஹா! மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே!

பார்த்திபன்

இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயிர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்

அமுதவல்லி

அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே! அழிவில்லா மோனநிலை சூழுதே!

பார்த்திபன்

முடிவில்லா மோன நிலையை நீ—மலை முடிவில் காணுவாய் வாராய்

அமுதவல்லி

ஈடில்லா அழகை சிகரமீதிலே கண்டு இன்பமே கொள்வோம்!

பார்த்திபன்

இன்பமும் அடைந்தே இகம் மறந்தே வேறுலகம் காணுவாய் அங்கே! வாராய் நீ வாராய் புலியெனத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்