மந்திரிகுமாரி—ராஜகுமாரி
களஞ்சிய வரிசை 12·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
மந்திரிகுமாரி
மனம்போல் வாழ்வு பெறுவோமே! இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம்—மகிழ்வோம் மெய்யன்பாலே என்னுயிர் நாதன் குணமே—மாறி நேர்மையாகினார் புவிமேல்!
ராஜகுமாரி
இந்த நாளுன் வாழ்வில் சுபதினமே! இன்பமே கொள்ளுவோம்! (மனம்)
மந்திரிகுமாரி
பெண் மனம் ஒன்றை நினைத்தால்—அதை திண்ணமாக செய்து முடிப்பாள்!
ராஜகுமாரி
உயர் காதல் வாழ்வு...... உயர் காதல் வாழ்வு பெறத்துடிப்பாள்! உண்மை சேர் அன்பினால் (மனம்)