மாட்டுக்கார பையன்

களஞ்சிய வரிசை 11·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

தொகையறா

ஊருக்கு உழைப்பவண்டி ஒரு குற்றம் அறியானடி உதைப்பட்டு சாவானடி—எருமைக்கண்ணுக்குட்டி

பாட்டு

நல்லதுக்கு காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு சொல்லப்போனால் வெட்கக்கேடு—எருமைக்கண்ணுக்குட்டி

தொகையறா

ஏச்சிப்பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே—எருமைக்கண்ணுக்குட்டி

பாட்டு

நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு வேணசெல்வம் வாரியே போவாரடி நாடுசெழிக்க யெண்ணி நாளெல்லாம் பாடுபடும் ஏழைக்கிக்காலமில்லே எவனெவனோ வாழுகின்றார்— எருமைக்கண்ணுக்குட்டி