லலிதா—பத்மினி—ராகினி நடனம்
களஞ்சிய வரிசை 10·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
ஓ......ராஜா......ஓ......ராணி! மிக—ஏழை எளிய எங்க மனசு குளிர இந்த குடிசை வழியே வாங்க!—(ஓ) அழகு ராணியே! புது—மனமே தருமா மலரே இதுதான் நீயே பார் மலரே இதுதான் நீயே பார் ஒரு ஜோடி மாடப்புறா! இணைபிரியோமே கூரைமீதிலே பாடுதுபாரே ஆசைகொண்டுதான்!......ஆ...... ஆசைக்கொள்ளாதே ஐயா எந்தன்மேலே கோவங்கொள்வாங்க இந்தராணி உன்மேலே மோகம் பொல்லாதே வேறே பெண்மேலே? ராஜாத்தி பாரிதோ ரோசாப்பூ போலே...... மீசை உள்ள ராஜா கள்ளத்தனமே கூடாது சாமி வீணே பேராசையாலே மோசம் செய்யாதே ஆகாதுதானே! வாலிபம் நில்லாதே எந்நாளும் தானே தீதெண்ணிடாதே கண்ணான என் வீரா! ஊரெல்லாம் நீயே சென்றாலும் தானே அம்மா போலே அழகு எங்கேயேனும் காணவும் ஆகுமோ சாமி! ஓ......ராசா எந்நாளும் இன்பமாகவே ஒன்றாய் வாழுவீரே!