கற்பகம்—பூலோகம்
களஞ்சிய வரிசை 8·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
கற்பகம்
பெறக்கப்போகுது!—பாரு பொறக்கப்போகுது
பூலோகம்
என்ன? எங்கே? யாருக்கு பொறக்கப்போகுது?
கற்பகம்
பத்துமாசம் சென்றவுடன் பாரு தெரியும் உனக்கும் எனக்கும் கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்து நாமும் குறையில்லாமே வாழ்ந்திருக்க (பெற)
பூலோகம்
(வசனம்) அப்படிச்சொல்லு
கற்பகம்
(வசனம்) ஐய மூலைத்தெரு சோசியனை முந்தா நாளும் கேட்டேன் பத்துமாசம் போனால் நமக்கு பிறக்கும் நல்ல காலமின்னான்
பூலோகம்
ஏழரை நாட்டு சனியன் போலே எங்கம்மா இருக்கையில் எப்படி பெறக்கும் நல்லகாலம்
கற்பகம்
ஏழாமடத்தில் ராஜாவாம் எனக்கும் உனக்கும் கல்யாணம் எப்படியும் நடக்குமின்னு எடுத்துச்சொன்னான் சோசியன் பெறக்கப்போகுது—பாரு பெறக்கப்போகுது எப்படியும் பத்துமாசம் எனக்கும் உனக்கும் நல்லகாலம் (பெற)