குமாரி வனஜா நடனம்
களஞ்சிய வரிசை 6·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
கண்ணடிச்சு யாரை நீயும் கண்ணி வைக்கப் பார்க்குறே கண்ணி வைக்கப் பார்க்குறே என்னையா ஏய்க்கிறே (கண்) என்னைக் கண்டு ஆசை கொண்டு ஏனோ சும்மா ஏங்குறே ஏனோ சும்மா ஏங்குறே எண்ணி எண்ணி வீங்குறே (கண்)
தொகையறா
மன்மத குஞ்சே! ஏ! மந்தியவதாரனே ஒன்முகம் தன்னையே ஒரு கண்ணாடியில் பாரேன்
பாட்டு
கொல்லைக்காட்டு நரியைப் போலே பல்லைப் பல்லைக் காட்டுறே இல்லை ஒனக்கீடுமே இருச்சவாய் வீரரே நொள்ளைக் கண்ணும் யானைக்காதும் காண ரொம்ப ஜோரையா காண ரொம்ப ஜோரையா கண்ணாடியைப் பாரையா
தொகையறா
குண்டுசட்டி வயிறழகா குடமிளகா மூக்கழகா நண்டுக்கால் நடையழகா பாலைவனைத் தலையழகா
பாட்டு
ஒட்டகத்தைப் போல நீண்ட ஒல்லியான ரூபனே ஒன்னழகைக் காணவே கண்ணு ரெண்டும் போதுமா (என்)