மந்திரிகுமாரி—பார்த்திபன்
களஞ்சிய வரிசை 5·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
மந்திரிகுமாரி
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!
பார்த்திபன்
அலைகள் வந்து மோதியே ஆடியுன்றன் பாட்டுக்கென்றே தாளம்
மந்திரிகுமாரி
உயர்ந்த மலையும் உமது அன்பின் [போடுதே.] உயர்வை காட்டுதே!
பார்த்திபன்
இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே
மந்திரிகுமாரி
தெளிந்த நீரைப்போன்ற தூய காதல் கொண்டோம் நாம்!
பார்த்திபன்
களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்!
மந்திரிகுமாரி
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?
பார்த்திபன்
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே!
இருவரும்
உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோணிதனில் ஊர்ந்துசெல்லுவோம்