மந்திரிகுமாரி

களஞ்சிய வரிசை 4·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

பெண்களினால் உயர்வாகிடுமே புவி வாழ்வது தானே வீரர் தம்மை நாட்டினுக்கீந்த விளங்கும் மேன்மையாலே (பெண்)

கானில் வாழும் தவஞானி காவியமே புனையும் கவிஞன்—கலை ஆர்வத்தோடு வாழும் அறிஞன்—தமை நாட்டினுக்கே அளித்தோர் யாரே? (பெண்) தீர எண்ணித்துணிந்தே தான் காதலரை இங்கு தேர்ந்தெடுப்பார்—மகிழ் வோடு தியாக வாழ்வே வாழ்வார்—எது நேரிடினும் மனமே மாறார் (பெண்)