குமாரி கமலா நடனம்
களஞ்சிய வரிசை 3·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
இசைக்கலையே இனிதாமே மேலான கானத்திலே ஆனந்தம் பெற்றார் யாரே? (இசை) வானோர் பாலர் முதலாய் ஒருயிர் இனமும் உளம் மயங்கும் கீத நாதம் தொனி கேட்டுமே—இன்னிசை தொனி கேட்டுமே பொல்லாத நாகமும் தன்னை மறந்தாடும் நிலை காணும் உலகினிலே (இசை) வீணையில் எழும் நாதமோடு புதுமையும் கூடிடவே குரலே தெளிவாய் மேலான இனிய ராக நயமுடன்—சுதியும் தாளம் நன்றிணைந்திடவே பாவமொடு தான் சொல்லும் எளிதாய்—பொருள் மேவும் இசைப்பாடல் தனைப்பாடினால் இதயமீது உவகையே துள்ளிடவே கலையை யாவருமே புகழ்வாரே கிடைக்காததே சங்கீத ஞானமே வையமீதிலொரு நிதியாமே—புகலரிய (இசை)