ராஜகுமாரி

களஞ்சிய வரிசை 2·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

ஆஹா ஹா ஹா வாழ்விலே ஓர் ஆனந்தம் இனி—பெறுவோம் நாமே நாளுமே ஓ மாரனே! யாழோடிசை போல் கூடியே (வாழ்) மா நதி மீதிலே தோணியுலாவியே காதலிசை பாடிடவே ஆசை அதிகமாகுதே! மா வீரனே வாராயே ஏகுவோம்!

மாமோகனா யாரேனுமே காணாதுமே பூங்காவிலே மலைமேலே தாவும் முகில் போலவே ஓடியே நாம் ஆடியே (வாழ்) வானகமேவியே மாமதி மீதிலே நாமாடலாம் வாராயே நீயுமே வானோரிலும் மேலான உன் மீதிலேதான் மாலாகியே முகில் காண ஆடும் மயில் போலவே பாரீரிதோ நானாடுறேன் (வாழ்)