தர்பார் நடனம்

களஞ்சிய வரிசை 1·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

ஆதவன் உதித்தான்; தாமரை மலர்ந்தது! காதலில் கலந்தது இரண்டும்! மாமலர் நாடி மகிழ்வுடனே மதுவுண்டு வண்டுகள் திரிவதைப்பார்! ஆடுதே அழகாய்! அழகாய் ஆடுதே! ஆரண்ய மீதினிலே மாமயில்கள் கூட்டமாய் அகம் மிகக்களித்தே நடம்புரியும் எழில் பாரிதோ அழகுறு தோகையும் விரித்தாடுது ஒயிலாகவே ஆனந்தம் கொண்டேதான் கார்முகில் காணவே அமைவுடன் சீர்பதம் பெயர்ந்தாடு மின்பக்காட்சி பார்! கான தனில் வாழும் மடமான்களினமே காண அழகாக மிக சிங்காரமாய் கண்கவர் மருண்ட விழிப்பார்வையுடனே ஒன்றாகவே துள்ளி உல்லாசமாய் ஓடி விளையாடுகிற காட்சிதனைப்பார்! ஏர் கலப்பை தோளிலேந்திய—உழவோர் எருதை ஒட்டிக்கொண்டேதான் ஏகிடும் காட்சி பார்! கஞ்சி கொண்டுபோகும் பெண்டீரும்—பயிர் வாழவே கழனியில் வேலை செய்வோரும்—அந்திப்போதிலே சேர்ந்து கைவீசியே திரும்பிடும் காட்சிதனைப்பார்