களஞ்சியப் பகுதி 60
வேங்கையூர்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[வேங்கையூர் மன்னன்—அருகே பூங்காவனம்—பூபதி பொன்னால் செய்யப்பட்ட தாமரையைப் பார்த்த படி பேசுகிறார்] பூபதி : அழகான தாமரை மலர்—அருமையாக செய்திருக்கிறான் சிற்பி...பொன்னிற இதழ்கள் கண்ணைப் பறிப்பது போல் மின்னுகின்றன....ஆனாலும் இந்த மலருக்கு வாசனை கிடையாதே மகாராஜா!...அப்படித்தான் ஆகிவிட்டது இளவராணி பூங்காவனத்தின் வாழ்வு!... பூங்காவனம் : மகாராஜா!...பூபதி வைத்தியர் இவ்வளவு சொன்ன பிறகாவது நான் ஏன் தங்களைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தேன் என்ற காரணத்தை புரிந்து கொண்டீர்களா அரச : புரிந்து கொண்டேன் பூங்காவனம்! இந்தக் காரணத்தை நீ முன்பே வெளியிட்டிருந்தால், என்னுடைய வாழ்க்கை எவ்வளவோ நிம்மதியாக இருந்திருக்கும்! பூங் : மகாராஜா! என்னை மன்னித்து விடுங்கள். நான் தங்களுக்கு பெரிய தவறுதான் செய்து விட்டேன். தங்களுக்கு மட்டுமல்ல; மாதர் குலத்துக்கே நான் தவறு செய்து விட்டேன்! மகாராஜா, என் மகனை எப்படியாவது விடுதலை செய்யுங்கள்! அர : பூங்காவனம்! நான் உன்மீது வைத்திருந்த அன்புக்காக மட்டுமே முத்தனை விடுவிக்கலாம். ஆனால் முத்தன் வேங்கை நாட்டின் விரோதி!...விடுதலை விரும்பி!... அவனை விடுவிக்க சட்டம் கிடையாது...... பூங் : மகாராஜா!...முத்தன் சாக வேண்டியது தானா?...என் மகன் சாகவேண்டியதுதானா?...அப்படியானால் என்னையும் கொன்று விடுங்கள்... அர : கவலைப்படாதே! முத்தன் இதுவரையில் என் இதயத்திலே குடியிருந்தவளின் மகன் என்பதற்காக விடுதலை செய்யப்படுகிறான்!...