களஞ்சியப் பகுதி 51
கோவில் மண்டபம்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
சுக : காதலியை காரிருளில் கைவிட்டுக் கதறுகின்றேன். எப்படி மீட்பேனோ...என் அருமைக் காதலி, உன்னை! சாதுவேடத்தில் வந்து சூது செய்து விட்டானே! முத்தாயி! முத்தாயி! அந்த மூர்க்கனிடமிருந்து எப்படி மீட்பேன் உன்னை?... [முத்தன் அவ்வழி போகிறான்] சுக : ஏ முத்தா! நில்லு—நில்லு—நல்ல சமயத்தில் வந்தாய்! நீ எங்கிருக்கிறாய்—எப்படி இருக்கிறாய்—என் றெல்லாம் கேட்பதற்கு நேரமில்லை இப்போது...என் ஆருயிர் காதலி முத்தாயியை ஆண்டிவேடம் போட்ட வேதாளம் எங்கேயோ ஏமாற்றி அழைத்துப் போகிறான். முத் : ஆ! எங்கே? சுக : அவனுடைய சத்திரத்திற்குத்தான் போயிருப்பான்...