களஞ்சியப் பகுதி 52

சத்திரம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[உள்ளே போர்வையால் ஒரு உருவம் மூடப்பட்டிருக்கிறது...வேதாளம் முத்தாயியுடன் வருகிறான்] வேதா : அதோ...உன் காதலன்! [ஆவலுடன் அத்தான் என்று போர்வையை இழுக்கிறாள். வேலழகன் எழுகிறான்.] முத் : ...ஆ!... வேலழகன் : முத்தாயி!...முழு நிலவே!...என் பக்கம் படுகிறாய்?...அத்தான் என்று அழைத்தாயே, அந்த அருமை முத்தனல்ல; தளபதி வேலழகன்! தெரிகிறதா என்னை?... முத் : தளபதி வேலழகன்! நாடு காக்க வேண்டிய நீங்கள் இப்படி நடந்தொரு நாடோடியாய் விட்டீர்கள்...வேண்டாம். நான் உங்கள் சகோதரி... வேல : மலரும் வண்டும் சகோதரர்கள் என்றால் மடையர்கள் தான் நம்புவார்கள் கண்ணே!... (கையைப் பிடிக்கிறான்) முத் : சீ!...விடு என்னை! வெட்கங்கெட்டவனே!...விஷப்புயலே! உன் காமச் சூறாவளியிலே கவிழ்ந்து விடும் மரமல்ல நான்... வேல : திட்டு! நன்றாகத் திட்டு! எழுத்துக்கு எழுத்து தித்திக்கிறது...கூண்டிலே அடைபட்ட கிளி கத்துவது கோபத்தால் அல்ல!...பயத்தால்! அதுவும் பழக்கப்படி சரியாகிவிடும்... முத் : நெருங்காதே!... வேல : இந்த நாட்டின் சேனைத் தலைவன் அழைக்கிறேன்...என் ஆணைக்கு அடங்காதவர்கள் என்ன ஆவார்கள் தெரியுமா?... முத் : கொன்று விடுவாய்! அவ்வளவுதானே?...சாவுக்குப் பயப்பட்டமாட்டேன்! சாவு உன்னை விடக் கோரமானதா? இல்லை...இல்லை...ஒருக்காலுமில்லை! வேல : முத்தாயி!—இரும்பு போன்ற என் கரங்களிலே யிருந்து தப்பிய மலர்கள் எதுவுமே கிடையாது!...ஞாபகம் வைத்துக்கொள்!... முத் : என்னை விட்டுவிடு, அக்கிரமக்காரா!... வேல : அக்கிரமம் என்ற அச்சாணியில்தான் அகில உலகமும் சுற்றுகிறது!...முத்தாயி!...இனி நீ தப்பவே முடியாது...இணங்கி விடு நீயாகவே!...(நெருங்குகிறான்—முத்தாயி ஓட முயலுகிறாள்) எங்கே ஓடுகிறாய்? நீ எங்கு சென்றாலும் நான் விடமாட்டேன்...வானம்பாடியாக நீ பறந்தால், உன்னை வட்டமிடும் பருந்தாக மாறுவேன்!...புள்ளிமானாக மாறித் துள்ளினால், புலியாகச் சீறிடுவேன்! நீ கடைசியில் பிணமானால்கூட உன் சரீரத்தைத் தொட்டெரிக்கும்சந்தனக் கட்டையாக மாறுவேன் நான்! இன்பமே!...இணங்கிவிடு...வசந்தத்தில் புஷ்பிக்கும் வாசப் புதுமலரே! வந்துவிடு என்னிடம். வண்ணத் தாமரையே! வண்ணஜாலப் பூங்கொத்தே!...என் வலிமை மிக்க தோள்களிலே உன்னை வாரி எடுத்துக் கொள்வேன்...பாய்ந்து விடு என்னமேல், பைங்கிளியே!... முத் : வீணே அழிந்து போகாதே; விலகி நில்... வேல : (பயங்கரச் சிரிப்பு) என்னை அழித்துவிட்டு உனக்கு யாரும் இப்போது அபயம் கொடுக்க முன்வரப் போவதில்லை!...கதைகளில் படித்திருப்பாய்; காதலிக்கு இன்னல் வரும்...கதாநாயகன் ஓடிவந்து காப்பாற்றுவான் என்று! அதெல்லாம் நடக்காதம்மா இங்கே!...அப்பேர்ப்பட்ட சீதையையே அசோக வனத்திலிருந்து சாமான்யமாக மீட்க முடியவில்லை; அவதார புருஷர் ராமச்சந்திரமூர்த்தியால்! ஞாபகத்தில் வைத்துக்கொள்! பரிதாபத்துக்குரிய பெண்ணே!...உனக்கு யாரோ பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், கண்ணகி போல கற்போடு நடக்கவேண்டும் என்று!...அதெல்லாம் சிலப்பதிகாரத்து க்காலம்...தடை விதிக்கப்படவேண்டிய இலக்கியம்...இந்தப் படைத் தளபதி அனுமதிக்க முடியாத தத்துவம்...ஆரணங்கே! வந்துவிடு அருகே... முத் : வேலும் வாளும் தாங்கி போரிடும் வீரத்திலவனே! ஒரு பெண்ணிடத்தில் இப்படிக் கோழைத்தனமாக நடந்து கொள்ளாதே... வேல : வீரத்தனமாக நடந்து கொள்ளட்டுமா?... முத் : விட்டுவிடு என்னை... வேல : கையிலே கிடைத்த கனி—கண்ணில் அகப்பட்ட பறவை—கூட விடமாட்டார்கள்! முத்தாயி! எச்சரிக்கிறேன்; பொறுமையை சோதிக்காதே...... (அணைக்க நெருங்குகிறான்) முத் : சீ! (அறைகிறாள்) வேல : ஆ!.... [வாள் உருவுகிறான். முத்தன் மேலேயிருந்து குதிக்கிறான்.] வேல : முத்தா!...வீணே சாகாதே! நீ யார் என் பகை நிதானித்துக் கொள்... முத்தன் : நானா? நான் தான் உன் தான்தோன்றித்தனத்தின் காப்பாரியிலே—சர்வாதிகாரச் சபா மண்டபத்திலே சிக்கிச் சீரழிந்த வீரன்!...ஆனால் இன்று அந்த வீரனை வரவில்லை...நான் சிந்திய ரத்தத்திற்கு—நான் அனுபவித்த சித்திரவதைகளுக்கு—உனக்குப் பரிசளிக்க வந்திருக்கிறேன் டா, பரிசளிக்க வந்திருக்கிறேன்! பெண் வேட்டையாடும் பித்தனே! மதுவும் மங்கையர் சுகமும் உங்கள் மருடத்தின் நிழலிலே மறைந்து கிடக்கலாம்...ஆனால், அந்த மருடத்தை தூள் தூளாக்கிப் போடும் புரட்சி சக்தி பொங்கி எழுந்துவிடும் என்பதை உணர முடியாத மதோன்மத்தர்கள் நீங்கள்... வேல : யாரோடு பேசுகிறாய் என்பதை மறந்து விடாதே முத்தா! முத் : என் வாழ்க்கையோடு விளையாடுகிற உன் னோடு விளையாடுகிறேன்! வேல : என் சுட்டுவிரல் அசைந்தால் நீ சுக்கு நூறாகப் போய்விடுவாய்... முத் : ஆஹா ஹா!...உன் சுட்டுவிரல் என்னை சுட்டு தியுமா?—இல்ல, நான் தான் என்ன கண்ணைப் பார்த்திராமா சுக்குநூறாக்கிவிட...பயமுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது படைத்தலைவரே! இனி பண்புடையோர் மட்டுமே வாழ்வதற்கு இடமளிக்கும் பகுத்தறிவுக் காலம் வந்து கொண்டிருக்கிறது. என் பகை நீர். நீளவில்வைத்துக் கொள்ளும்...உம்மைப் போல சர்வாதிகார அடிச்சுவட்டை பின்பற்றி வேக மாகச்சென்றவர்களின் ஆட்சி பீடம் ஓடாகி, மேடாகி, இருந்த இடம் தெரியாமல் சுடுகாடாகிப் போய்விட்டது! வேல : கையிலே இருப்பது என்ன தெரிகிறதா?... முத்தன் : நன்றாகத் தெரிகிறது...கோழையிடத்திலே இருக்கிற கத்தியின் பளபளப்பு, வீரனுடைய கரத்தின் சொரசொரப்புக்கு முன்னே எம்மாத்திரம்? உன்னிடம் கத்தி!...இதோ என்னுடைய போர்க்கருவி! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பாசறையிலே தயாரான போர்க்கருவி! கயவர்கள்—கத்திவீச்சுக்கள்—கண்ணியமற்ற செயல்கள்—எதிர்த்து நிற்கும் போர்க்கருவி!... வேல : அவ்வளவு பெரிய வீரனா?...கத்தியை கையால் எதிர்க்கும் வீரனா?...இதோ பார்ப்போம் அதையும்... [இருவருக்கும் பயங்கரமான போர். குறும்பன் வருகிறான். நிலைமையைக் கண்டு ஓடுகிறான். போரின் முடிவு: படைத்தளபதியின் மரணம்!] முத்தாயி : அத்தான்!... முத் : முத்தாயி!... [குறும்பன் வீரர்களுடன் வருகிறான்] குறும்பன் : ஆ!...தளபதி!...அய்யோ, இறந்துட்டீங்களா? டேய், இவரைத் தூக்கிட்டு போங்கடா. டேய் முத்தா! நீதானே இவரைக் கொலை செய்தது?...டேய், இவனையும் கைது செய்யுங்கள். [வீரர்களுக்கும் முத்தனுக்கும் சண்டை—முடிவில் முத்தன் பிடிபடுகிறான்...முத்தாயி கதறி மூர்ச்சையாகிறாள்.]