களஞ்சியப் பகுதி 50

சுமதி வீடு

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தாயி படுத்திருக்கிறாள். வேதாளம் அழைக்கிறான்] வே : அம்மா!...அம்மா!... முத் : யாரய்யா நீங்கள்?...என்ன வேண்டும்?... வே : இங்கு முத்தாயி என்பது யார்? முத் : ஏன்!...என்ன விசேஷம்? வே : முத்தன் என்பவருக்கு பகைவர்களால் தாக்குதல் ஏற்பட்டு மரணவஸ்தையில் இருக்கிறார். முத் : ஆ!...அத்தான்!... வே : நீங்கள்தானா முத்தாயி? என்னுடன் வந்தால் அவரை உயிரோடு பார்க்கலாம்... முத் : அய்யா!...அவர் எங்கே இருக்கிறார்? என்னை அழைத்துப் போங்கள்... வே : சரி வாருங்கள்; காட்டுகிறேன். [முத்தாயி வேதாளத்துடன் செல்வதை அங்கு வரும் சுகதேவ் பார்த்து விடுகிறான்] ஆகா! என்காதலியை இந்தக் காதகனல்லவா அழைத்துப் போகிறான்? நிராயுதபாணியாகிய நான் எப்படி நேரடி நடவடிக்கை எடுக்க முடியும்?...ம்...பார்க்கலாம்...