களஞ்சியப் பகுதி 49

சத்திரத்திற்குள்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

வே : ஓடிப்போன முத்தன் கூட ஒரு விடுதலைப் பட்டாளத்தைச் சேர்த்து க்கொண்டு பழுதாரை விடுவிப்பதற்காக சதி செய்கிறான் என்று தெரிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல அந்தப் பயல் முத்தனையும் பிடித்துவிட வேண்டும். தள : அதிருக்கட்டும் - வேதாளம்! சுகம் எங்கே என்று தேடிஅலையும் என்னிடம் விடுதலைப் பட்டாளத்தைப் பற்றி இப்போது வீணுக ஏன் பேசுகிறீர்? முதலில் அந்த சுந்தர மேனியாளை எப்படியாவது கொண்டு வா! வே : இருங்கள். வெற்றியோடு வருகிறேன்.