களஞ்சியப் பகுதி 48
வேதாளத்தின் ஆசிரமம்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[சுகதேவ் கதவைத் தட்டுகிறான். உள்ளே வேதாளம் தளபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறான்] சுக : ஸ்வாமி! ஸ்வாமி! வே : பொறு. இன்னும் நிஷ்டை முடியவில்லை. சுக : சுகதேவ் வந்திருக்கிறேன் ஸ்வாமி! கதவைத் திறவுங்கள். வே : மூடபக்தா! இரு. கடவுளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், முத்தாயி விஷயம் பற்றி... சுக : (தனக்குள்) ஆகா! கடவுளோடு பேசுகிறாரா? நாம் தான் பகவானைப் பார்க்க முடியாது. பாப ஆத்மா! சாமியார் பேசும்போதாவது மறைவாக இருந்து பார்த்து விடுவோமே! [ஜன்னல் கதவைத் திறந்து பார்க்கிறான். அவனுக்கு தூக்கி வாரிப் போடுகிறது] சுக : ஆ! அய்யய்யோ! தளபதி!...வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறுகிறது. எங்கப்பா! நல்ல வேளை, நான் பிழைத்தேன்... (ஓடுகிறான்.)