களஞ்சியப் பகுதி 47

வீட்டிற்குள்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

முத்தாயி : அன்று உன்னைப் புரிந்து கொள்ளாமல் கோபமாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு... சும : அதையெல்லாம் மறந்துவிடுவோம்! முத் : கல்யாணமானதும் உன்னுடைய குறும்புப் பேச்செல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்துவிட்டதே... சும : எங்கும் ஒளியவில்லை...அவர் உடல் நலம் பெறட்டும்...பிறகு கேளேன், என் பேச்சை! முத்தாயி, நீ என் பேச்சை குறும்பு என்கிறாய்; அவர் என்ன தெரியுமா சொல்லுகிறார்?...கரும்பு என்கிறார்! முத் : உம், சரி சரி...உன்னுடையவனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காதே...கொஞ்சம் என்னுடைய வரையும் கவனி...