களஞ்சியப் பகுதி 46

சுமதி வீடு

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தாயி சுமதியுடன் அவள் வீட்டில் நுழைகிறாள். வேதாளமும் சுகதேவும் அதைப் பார்க்கிறார்கள்.] சுக : இந்த வீட்டுக்குள் போகிறார்கள்...சாமி, நாமும் போகலாமா?... வே : பொறு அப்பனே! சுக : பொறுக்குகிறேன்... வே : வா...வா...நம் இடத்துக்குப் போவோம்...முத்தாயி இருக்குமிடம் தெரிந்து விட்டது. இனி அவள் யாரைச் சேரவேண்டுமோ அவனிடம் அவளைச் சேர்க்க வேண்டியது என்கடமை... சுக : கடமையை விரைவில் நிறைவேற்றுங்கள் ஸ்வாமி! வே : அப்படியே ஆகட்டும்...சரி...சரி...வா...