களஞ்சியப் பகுதி 45

தனவணிகர் வீடு

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

முத்தன் : பொன்னி எங்கே? தனவணிகர் : நான் போகவில்லையென்றால் குழந்தை அவ்வளவுதான். காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து... முத் : பொன்னி எங்கே? தன : அடடே! நான் அவசரத்தில் அவளை மறந்தே விட்டேன்! முத் : மறந்து விட்டீர்கள்! எங்களைப் போன்ற ஏழைகள் மட்டுமல்ல; உங்கள் சீமான் இனம், இரக்க மனமும் ஒரு பண்பையே மறந்து பலநாளாயிற்று. [முத்தன் ஓடுகிறான்]