களஞ்சியப் பகுதி 42

மண்டபம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[புயல் ஓய்கிறது. வேதாளமும், சுகதேவும் ஒரு மண்டபத்தில் உட்கார்ந்திருக்கின்றனர்] வேதாளம் : பெண்ணை வந்தொரு மாயப் பிசாசு பிடித்துண்ணே...கண்ணுல மயக்கி... (வணிகர் வருகிறார்) வணிகர் : அய்யா...அய்யா! ஒரு பெண்ணையும் குழந்தையையும் பார்த்தீர்களா அய்யா?... சுக : என்ன! பெண்ணும் குழந்தையுமா?...கடற்கரையிலே எத்தனையோ ஆணும் எத்தனையோ பெண்ணும்... வணி : இல்ல ைஅய்யா! வழக்கம்போல என் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடற்கரைக்கு வந்தாள் வேலைக்காரி... வேதா : போ...போ...போய்த் தேடு! (வணிகர் போகிறார்) சுக : நாங்க தேடறதே கிடக்கலையாம். இவன் வேற...வாங்க சாமி போகலாம்.