களஞ்சியப் பகுதி 40

அடைக்கலபுரி தேவாலயம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[இளந்துறவி சுகதேவ், "முத்தாயி" ஜபத்துடன் நிஷ்டை இருக்கிறான். அப்போது துறவி வேடத்துடன் வேதாளம் வருகிறான்] வேதாளம் : ஓம் சக்தி! சாமுண்டி, மகாகாளி, பரமேஸ்வரி, ரேணுகாம்பா, சுந்தரி, சவுந்தரி, நிரந்தரி, துரந்தரி, ஜோதியாய் நின்ற உமையே!....சுக வார்த்தியினைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய்!...அம்பிகே! ஜெகதம்பிகே! காளி!... (சுகதேவைப் பார்க்கிறான்) சுக : முத்தாயி...முத்தாயி... வேதா : இளந்துறவியே! முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்... சுக : வெண்தாடிப் பெரியவரே!...உலகம் பொய்! உமக்கென்ன வேண்டும்?... வேதா : பொய்யான இந்த உலகத்தில் மெய்யான இஞ்ஞானி!...உமக்கு எவ்வூர்?...உம்மைப் பார்த்தால் ஏதோ உள்ளங் கவர்ந்த ஒரு பொருளை பறி கொடுத்தவர்போல் தெரிகிறதே!... சுக : ஹா...ஹா...ஹா! அதிசய மனிதர் நீர்! அகத்தில் உள்ளதை எப்படிக் கண்டீர்? எவ்வாறு விண்டீர்? திரிகால முனிவர் தேவரிஷி நாரதமா உம்மவர்?... வேதா : தம்பி!...காதலில் தோற்றவன் நீ என்பது என் ஞானக் கண்ணிலே தெரிகிறது...மெய் தானே?... சுக : ஆமாம்! எப்படித் தெரியும் உமக்கு?... வே : உத்தமர்களுக்கு உலகின் ஒவ்வொரு கோடியும் தெரியும்...நீர் ஓர் அரண்மணிவாசி!...ஆணங்கின் மயக்கத்தால் ஆசிரமத்துவாசியாகி விட்டீர்! இல்லையா?... சுக : ஆமாம், ஸ்வாமி! ஆரணங்குகளின் மயக்கம் விட்டவர்களே. ஆஸ்ரமவாசியாக முடியும் மென்பார்கள்... நானே அந்த மயக்கத்தாலே கட்டுண்டு ஆண்டியாகி இருக்கிறேன்!... வே : அதிசயமில்லை...அரண்மனையை விட்டு ஆசிரமம் வந்தான் விசுவாமித்திரன்...அங்கும் விட்டபாடில்லை, அழகிகளின் தொல்லை...அவன், தவத்தின் மேன்மைக்கோர் எல்லை...மேனகா பெற்ற பிள்ளை... சுக : ஆகா! பழுத்த அனுபவமும், கொழுத்த பக்தியும் கொண்ட தவசிரேஷ்டரே! தங்களால்தான் நான் தன் பயனை வேண்டும். வரத்தைத் தாருங்கள்... வே : புரிகிறது! அந்த நாலெழுத்து நங்கையை நீ அடையவேண்டும்...அவ்வளவுதானே...? சுக : மு—த்—தா—யி! ஆகா!...தச்சு...தச்சு...சரியாக சொன்னீர், சற்குருவே!...நாலே எழுத்துதான் அந்தச் நாரீமணியின் பெயர்!... வே : அவளை உனக்கு நான் திருமணம் முடித்து வைக்கிறேன்...இளப்பவயதில் இந்தக் கோலம் வேண்டாம் உமக்கு!...செய்யவேண்டிய அகமெல்லாம் செய்துவிட்டு, தள்ளாத காலத்திலே ‘சிவசிவா’ என்று கூறுவதே மனிதர்க்குத் தகுதியான செய்கை... சுக : என் முத்தாயி கிடைத்துவிடுவாளா?...தேடாமல் வந்த என் தெய்வமே!...முருகனுக்கும், வள்ளிக்கும் நடுவிலே வந்த நாரதனைப் போல எனக்கும் முத்தாயிக்கும் இடையிலே வந்து இறைவனது திருவருள் பெற்ற என்னப்பனே! போற்றி!...போற்றி!... வே : சரி வா...என்னுடைய இருப்பிடத்திற்குப் போவோம்...விரைவில் முத்தாயி கிடைப்பாள்...