களஞ்சியப் பகுதி 39
தனவணிகர் வீடு
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[முத்தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறான். முத்தாயி அதை கதவிடுக்கில் நின்று கவனிக்கிறாள்] முத்தன் : எப்படியும் பழுதார் விடுதலை பெறவேண்டும்...இந்த எண்ணம் மக்கள் உள்ளத்திலே பதிய வேண்டும்...விடுதலை உணர்ச்சி காட்டுத்தீபோல் பரவிவிடுமானால் பிறகு ஒரே நாளில் பழுதாரில் சுதந்திரக் கொடியை பறக்க விட்டு வேங்கை நாட்டு ஆதிக்கத்தை விரட்டிவிடலாம்! தோழன் 1 : மக்கள் மனதை மாற்றுவதென்றால்... தோழன் 2 : யோசித்தால் நடக்காது...செயலில் இறங்க வேண்டும்... தோழன் 3 : ஆமாம்...அதுதான் என் அபிப்பிராயமும்... முத் : மக்கள் எங்கெங்கே தங்கள் கவனத்தை செலுத்துகிறார்களோ, அத்தகைய எல்லாத் துறைகளிலும் நமது கருத்தைப் பரப்ப வேண்டும்... தோழ 2 : ஆங்!...அண்ண ாசொல்வதுதான் சரி!... முத் : நீங்கள் போங்கள்...மற்றவைகளை கவனிக்க நான் வருகிறேன்... [போகிறார்கள். முத்தாயி வருகிறாள்] முத் : முத்தாயி...! முத்தாயி : ஆமாம்; இதெல்லாம் என்ன? முத் : விடுதலைப் போருக்கு ஆரம்பம்! அவர்கள் என் தோழர்கள்...பழுதார் விடுதலையடைய இது போல ஒரு படையே சேர்க்கிறேன்... முத்தாயி : எனக்கு பயமாயிருக்கிறது... முத் : பைத்தியம்! பயமா?...புறநானூறு சிரிக்கப் போகிறது உன்னைப் பார்த்து!... முத்தாயி : விடுதலைப் போர் நடத்தினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வந்து விட்டால்... முத் : பிறகென்ன-விடுதலை வீரனுக்கு விருந்தா வைப்பார்கள்?...இத பார்...இந்தக் குழந்தைகூட என்னையே பார்க்கிறது...டேய்!...இதுபோல நமக்கு ஒன்று.... முத்தாயி : இன்னும் எட்டு, ஒன்பது மாதங்கள் பொறுத்திருங்கள்... முத் : ஆ...அப்படியா? நீ சொல்லவில்லையே என்னிடம்...