களஞ்சியப் பகுதி 38
பலதேவர் மாளிகை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
பலதேவர் : திரிசங்கு! வாட்டும் அவன்! நல்லவனைப் போல நடந்து நரிவேலை நடத்தி இருக்கிறானே, துரோகி! வேதாளம் : நல்லவர்களே இந்தக் காலத்தில் நம்பக் கூடாது பிரபு. பல : யாரங்கே? (சேவகன் வருகிறான்) உடனே போய் திரிசங்குவை கைகால்களைக் கட்டி இழுத்து வாருங்கள். எவ்வளவு பொருள் அழிந்தாலும் சரி—என் மகன் என்னிடம் அழைத்து வந்தால்போதும். அவன் வராவிட்டால் ராணி இறந்தே விடுவாள். வேதா : சுகதேவ் காணாமற் போன செய்தி யாருக்கும் தெரியவேண்டாம். நானே அவரைத் தந்திரமாக கண்டுபிடித்து வந்து தங்களிடம் ஒப்படைக்கிறேன். பல : மிகவும் நன்றி. ஐநூறு பொன் தருகிறேன்—சுகதேவ் கிடைத்துவிட்டால் உமக்கு பரிசாக ஐநூறு பொன் தருகிறேன் இரும்—வருகிறேன். (பலதேவர் போகிறார்) வேதா : துன்பம் துணையோடு வரும், இன்பம், தனியாக வரும் என்பார்களே, அது தவறு! வேதாளத்தின் மீது இன்பம் எறும்பு வரிசைபோல் அல்லவா படை எடுக்கிறது! உம்...ஒருவன் அடித்துத்தான் ஒருவன் சுகம் தேடமுடிகிறது! ஈ சிலந்திக்கு ஆகாரம்—சிலந்தி பல்லிக்கு ஆகாரம்—பல்லி பூனைக்கு ஆகாரம்—பூனை குறவனுக்கு ஆகாரம்—குறவன் எமனுக்கு ஆகாரம்—அதே வழிதான் என் வழியும்! வேகமாகப் போகும் என் வளர்ச்சி ஒருவேளை என்னை பழுதார் பாளையக்காரராகக்கூட ஆக்கி விடலாம்!... பல : (உள்ளிருந்து வந்து) வேதாளம்! இந்தாரும்! வேதா : பெருமை மிகு பிரபுவே! உங்கள் அருமை மிகு மகன் எப்படியும் அழைத்து வருகிறேன். ஆண்டவனே துணை! அம்மையப்பா!