களஞ்சியப் பகுதி 31
கண்ணகி மாளிகை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
(வேதாளம் சுகதேவ்) சுகதேவ் : வேதாளம்! நீர் சொன்னபடி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டேன். இரண்டாயிரம் பொன் செலவழித்து...ஆபரணம்...ஆடை அது...இது....எல்லாம் வாங்கி விட்டேன்...என் முத்தாயி வந்து விடுவாளா?...வேதாளம்...என் கண்ணுடிக்காக இந்த கண்ணகி மாளிகை காத்துக் கிடக்கிறதே...வருவாளா அந்த ஆணங்கு?... வேதாளம் : (விலக்கிக் காட்டி) நிச்சயமாக தம்பி!...இரண்டிலே ஒன்று தொடங்கு! (தொடுகிறான்) வேதா : ஆ!...கட்டாயம் வருவாள் தம்பி... சுக : வருவாளா?... வேதா : சரி!...ஒரு பூ சொல்லுங்க தம்பி!... சுக : பூ!...இதுதானா? புளியம்பூ... வேதா : ஏன் இந்த வம்பு!...நானே போய் முத்தாயியை அழைத்துக் கொண்டு வருகிறேன்...நீங்கள் இங்கேயே இருங்கள்...இப்போதே வருகிறேன்.