களஞ்சியப் பகுதி 30

பாசறை சமையல் கூடம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[பழுதார் வீரர்கள் சமைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோது முத்தன் வருகிறான்] வீரன் 1 : முத்தண்ணே!...வாண்ணே வா! முத் : உம்...பழுதாரில் சுதந்திர ராஜ்யத்தை சமைக்க வேண்டிய நீங்கள்...பகைவனின் ஊரில் உணவு சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...... வீரன் 2 : உம்...என்ன பண்றது?...நம்ம அம்மா நம்மை பெற்ற நேரம் அப்படி! வீரன் 3 : அடிமையாய் வாழணும்னு தலையில் எழுதி இருக்கு! முத் : பெற்ற நேரத்தை குறைகூறாதே தம்பி!...நாமெல்லாம்—விடுதலை வீரர்களாய் வாழவேண்டும் என்ற கவலை நமது தாய்மார்களுக்கு ஏற்பட்டவில்லை...உம்...அதெல்லாம் புறநானூற்றுத் தாய்மார்கள் வாழ்ந்த காலத்தில்... வீரன் 4 : புறநானூறு...புறநானூறுன்னு அடிக்கடி சொல்றியே அது என்ன அண்ணே?... முத் : தமிழகத்துத் தாய்மார்களின் வீரக்காதை அது...அதைப்பற்றி எளிய நடையில் நானே எழுதியவைத் திருக்கிறேன் ஒரு கவிதை...சொல்கிறேன் கேள்.... குடிசைகாண்! ஒருபுறத்தில் கூரிய வேல், வாள் வரிசையாய் அமைத்திருக்கும். வையத்தை பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்து வைத்த படைக்கலம் போல் மின்னும் மிளிரும்...புலியின் குகையினிலே அழகில்லை......புதுமையல்ல! கிளியும் மெச்சிவிருப்பும் கிழவிக்கும் தன்மையும் துளி காட்டா மானத்தின் உறைவிடம்; மறவன் மாளிகை! இல்லத்து வாயிலிலே கிண்ணைத்துச் சோறோடு வெல்லத்தைச் சிறிதுகலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்; பெருநரைக் கிழவியொருத்தி... ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான்...ஆடி வந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்; ஆண்மகனா நீ தம்பி?...மூச்சுக்கு மூச்சு இடைவெளி ஏற்படட்டும்; பின்பு பேச்சுக்குத் துவக்கம் செய்: என்றாள்; அந்த கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி...வேடிக்கை நேரம் இது வல்ல பாட்டி; உன் வாடிக்கை கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் களத்தில் என்றான்...மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஓர் முறை...துயரம் ஆடுகையில் காய்கள் வெட்டுவதுண்டு...களமும் அதுதான்...காயம் மார்பிலா முதுகிலா என்றாள்! முதுகிலென்றான்...கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்; வாளை எடுத்தனள் முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினள் வேகம்...கோழைக்குப் பால் கொடுத்தேன்—குப்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர் போர் வீரனே!....அன்றொரு நாள்...பாய்ந்து வந்த ஈட்டிக்கு பதில் சொல்ல மார்பைக் காட்டி சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணுளர் அவருக்குப் பிறந்தானா?...அடடா மானம் எங்கே?....குடிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்துபட்டான்...இமயவரம்பினிலே வீரம் சிரிக்கும் இங்கு வீண நரம்பினிலே இசை துடிக்கும்...அதுவும் மானம் மானம் என்றே முழக்கும்—மதுவும் சுருவும் உண்டு வாழும் மானமற்ற வம்சமா நீ...எடா, மறத்தமிழ் குடியிலே மாசு தூவிவிட்டாய்...தின்று கொழுத்தாய்?—திமிர்பாய்ந்த தோள்கள் எங்கே?...திணவெடுக்க வில்லையோ—அங்கேதோ என்று அலறினள். எண்பதை நெருங்கிய ஏழைக்கிழவி—சென்றங்கு செறுமுனையில் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளையைப் புறட்டிப் பார்த்தாள்...ஆங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிட்டு ரத்தவெள்ளம்! பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்...மணப்பந்தலிலும் அந்த மகிழ்ச்சி இல்லை...மகன் பிறந்தபோதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்புகாட்டி! அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை—அடடா கருத்தரியப் பொய் சொன்ன கயவனெங்கே?...வாளிங்கே...அவன் நாக்கெங்கே? வீரர்கள் : தச்...தச்...தச்... முத் : இப்போது சொல்லுங்கள்...மானமும், வீரமும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை...அவைகளை மாற்றானின் காலடியில் மிதிக்க விடலாமா? வீரர்கள் : கூடாது!...கூடாது! முத் : அப்படியானால் பழுதாரை விடுவிக்க என் தலைமையில் ஒன்று சேருங்கள். வீரன் : அண்ணே! உன் தலைமையில் பணி புரிய இந்தத் தம்பி எப்போதும் தயார்... வீரர்கள் : தயார். நான் தயார். நானும் தயார். நானும் தயார்.... (வேலழகன் சிரித்தபடி வருகிறான்) வேல : எல்லோரும் தயார்...ஆனால் நான் தான் தயார் இல்லை...விடுதலை வீரர்களாகிய உங்களை வெளியில் விட்டா!...ஏ? அடிமைகளே! மலைப்பாம்பின் வாயில் இருந்து கொண்டு விடுதலை மகுடியா ஊதுகிறாய்?...அதன் வயிற்றுக்குள்ளேயே உன்னைப் போட்டு விடுகிறேன்...பார்...இதோ தெரிகிறதாடா உனக்குச் சித்திரவதை செய்யப் போகும் சிறைச்சாலை... முத் : சிறைச்சாலை!...புரட்சிக் கவிதை புரியாதே உமக்கு!...அறிவீர்...மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை...எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை... வேல : எதிர்த்துப் பேசாதே...மூடு வாயை!...... [இழுத்து உள்ளே தள்ளுகிறான்.] பழுதார் வாழும் பூச்சிகளே! புழுக்களே!...புலியை இடறுகிறீர்கள்—ஜாக்கிரதை;...'இம்' என்றால் சிறைவாசம்; 'ஏன்' என்றால் வனவாசம்! [வேகமாகப் போகிறான்.]