களஞ்சியப் பகுதி 17

அஞ்சல் மனை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தனும், நண்பர்களும் இருக்கிறார்கள்] முத்தன் : ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்— இன்று; நான் நாளை நீங்கள்; இப்படி வயிற்றில் அடிக்கப் படலாம். நண்பன் : இதற்கு வேறு என்னதான் வழி...? முத்தன் : நாமெல்லாம் அடிமைகளாய் இருக்கும் வரையில் நாளுக்கு ஒரு அதிகாரம் ஆளுக்கு ஒரு நாட் டாண்மை இருக்கத்தான் செய்யும்...தேனுக்கு இடம் தேடிக் கொடுத்துவிட்டு தேன் துளிகளுக்கு ஆசைப்பட முடியுமா?...வேங்கை நாட்டான் பழுதார் பாளையக்காரரை மிரட்டுகிறான்... பாளையக்காரர் நம்மை மிரட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்கிறார்...வீட்டு ரோஜாக்களைக் கசக்கி எறியப் பட்டு ராஜா தர்பார் நடத்துவானும் பாளையக்காரரின் மகன்...அதை நான் கேட்பது தவறுமா?...குதிரைக் காரனும் நான்! கோபுர மேதைகளாம் அவர்கள்! உம்...கொஞ்சம் உயர்ந்த அடிமைகள்; அவ்வளவுதான்! [நண்பர்கள் சிரிக்கிறார்கள்...] சிரித்துப் பயனில்லை நண்பர்களே—சிந்திக்க வேண்டும், சிலந்திக்கூடாக மாறிவிட்ட நம் பழுதாரை சிங்காரப் பூக் காடாக மாற்ற வேண்டும்!... [வேதாளம் வந்தபடி] வேதாளம்: மாற்றுவப்பா; மாற்றுவ!...இந்த உள்ளங்கை இடத்துக்கு உள்ள வாடகையைக் கொடுக்க உன்னால் முடிய வில்லை...நீ பழுதாரை பூக்காடாவும் மாற்றுவ!...புஷ்பக் காட்டாகவும் மாற்றுவ—ஏய்!...யாரப்பா நீங்கவெல்லாம், ம்... உங்களுக்கு இங்க என்ன வேலை?...உம்...உப்...போங்க... போங்க... [போகிறார்கள்] ஏ....முத்தா! முதல்ல என் வாடகையைக் கொடு.... முத்தன்: வாடகையா? இந்த சமயத்திலா கேட் கிறீர்கள்?... வேதாளம்: வேறு எப்போது கேட்பது?.... பொருள் இருக்கும்போதுதான் நீயே கொடுத்துவிடுவாயே, இல்லாதபோது கேட்டுத்தானே வாங்க வேண்டும்... முத்: ஒரு வேலையும் கிடைக்கவில்லை... வே: ஆமாம்!.... இனிமேலும் கிடைக்காது... அதற்காக... முத்: கொஞ்சம் பொறுங்கள். வே: ஏ. முத்தா! புத்தியற்ற வாலிபனே! இந்த உலகத்தில் பொருள் தேடவா வழி இல்லை... முத்: திருடவா?... வே: சே! ஆள் திடகாத்திரமாய் இருக்கிறாய்... தேகத்தில் நல்ல வலு இருக்கிறது... முத்: பலதேவரை ஒரேயடியாக அடித்து வீழ்த்தி விடலாம்; இல்லையா?... வே: பைத்தியக்காரா!...அதுவல்ல நான் சொல்வது— வேங்கைபுரத்தாரின் படையில் சேர்ந்து விடு என்கிறேன்! முத்: என்ன? படையிலா?!... வே: ஆமாம்! பாளையக்காரர் அதிகாரம் தடுக்க முடியாது...புகழ் வாய்ந்த வேல்...போர் வீரன் வேல்... முத்: போதும்...போதும்...நம்மை அடிமைப் படுத்தி இருக்கும் ஆதிக்கக்காரரின் சேணையிலே நான். சே! அதைவிட சாகலாம்! வே: ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள் கள். நீதான் அறிவாளியா?...மாய்க்கைநாத சாமியாரே யுத்தப் பிரச்சாரம் செய்யப் போகிறார்... முத்: சாமியார்! செய்வார். சண்டையில் சாகப் போவது அவர் அல்லவே...அதனால்! வே: போதும்...நீ படையிலும் சேர வேண்டாம். ஒன்றும் வேண்டாம். எனக்கென்ன வந்தது? என் வாடகையை மாத்திரம் எப்படியாவது கொடுத்து விடு. நல்லவன் கேட்டுப் போகாதே—நான் போகிறேன்...பிரசங் கம் கேட்க. [போகிறான்]