களஞ்சியப் பகுதி 16

திரிசங்கு வீடு

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

திரிசங்கு : உம்...முத்தன் ... சத்தற்ற சக்கைதான் இனிமேல்—; அரண்மனையில் மட்டுமல்ல—பாளையக்காரர் அதிகாரத்திற்குட்பட்ட எந்த இடத்திலும் வேலை கிடை யாது அவனுக்கு. முத்தாயி : அப்பா! அவருக்கு வேலை கிடைக்கும் வரையில் அவர் நம் வீட்டில் இருந்தால் என்ன? திரிசங்கு : சரிதான்! சாப்பாட்டோடு விளையாடாதே என்கிறேன் நான்; நீ அதையே கொண்டு வந்து எனக்கு மாலையாகவும் போடுவேன் என்கிறாய். முத்தாயி! நான் சொல்வதைக்கேள். கண்ணைத் திறந்து கொண்டு கள்ளிக் காட்டில் நடக்க எவனும் துணிய மாட்டான். முத்தாயி : கள்ளிக்காடல்ல அப்பா-காதற் சோலை திரிசங்கு : வாயை மூடு-இல்லாவிட்டால் நானுவே காதை மூடிக்கொள்கிறேன். திரித்திர நாராயணனிடம் காதலாம் காதல்; கோலம்மா கொஞ்சம் தயவு செய்து. கடன் பட்ட குடும்பம் நம்முடையது. அது மட்டுமல்ல. கடமையும் பட்டிருக்கிறேன் இளவரசருக்கு-தேவை யான போதெல்லாம் எனக்குப் பொருள் கொடுத்திருக் கிறார்-நானும் கைநீட்டி வாங்கியிருக்கிறேன்-அன்றைக்குக் கூட திருமண முன் செலவுக்காக சிறு பொன் கொடுத்தி ருக்கிறார். [பெட்டியைக் காட்டி] முத்தாயி : அப்பா! பொருளுக்காக என் வாழ்வு பாழாக விடுவதா? வாழ்வுக்கேற்றவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்குக் கிடையாதா அப்பா? திரிசங்கு : உன் வாழ்வுக்கேற்றவன்தான் மாட மாளிகை, கூடகோபுரத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறேன். இரும்புப் பெட்டியே நம்மை நாடி வருகிறது-நீ திருவோட் டைத் தேடி ஓடுகிறாய், முத்தாயி : அப்பா! சுதந்திரமாக வளர்ந்த என்னை பாளையக்காரின் சொத்துக்களைப் பிடிக்கும் சூதாட்டக் காரியாக; உங்கள் கடன் அடைக்கும் அடமானப் பொரு ளாக ஆக்கிவிடாதீர்கள் அப்பா. திரிசங்கு : போதும் முத்தாயி போதும்—நீ அந்த அன்னக் காவடிக்கு மாலையிட என் உயிர் உள்ளவரை சம்மதிக்க மாட்டேன். நீ மறுத்தால் என் பிரேத ஊர்வலம் போன பிறகுதான் உங்கள் கல்யாண ஊர்வலம் போக முடி யும். ஆமாம்! ஞாபகம் வைத்துக் கொள்.