களஞ்சியப் பகுதி 15
பூங்காவனம் அறை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
குரல் : இங்கென்ன வாழ்கிறது! இங்கேயும் குழப் பம்தான்! காதல்புறு ... கன்றைநாடும் பசு ... மான்தோல் வேங்கை! எத்துணைச் சிறப்பான கருத்து கலையின் அழகே அழகு...அந்தக் கருத்துக் கலைகள் அவளுக்கு ஒரு ஆறு தலா என்ன?...அந்த உயிர்நிறை ஓவியங்களே பூங்காவனம் பார்த்திருக்கிறாள்... —ஆனாலும் இப்போது அவைகளே அவள் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்...அவள் கண்கள் அடிக்கடி வாயிற் புறத்தை வட்டமிட்டு திருப்பியபடி இருக்கின்றன. காலடி ஓசை கேட்கிறதா என்று கவனித்தபடி இருக்கின்றன முத்தன் வருவானா என்ற ஆவல் வெளிப்பட்டபடி துடிக் கிறது இருதயம்...ஆ!...அதோ வந்து விட்டான். (முத்தன் வந்தே விட்டான்.) (முத்தன் வருகிறான் தயங்கியபடி) பூங் : வா...முத்தா வா... முத் : ஏன் கூப்பிட்டீர்கள்?... பூங் : சொல்கிறேன் வா!... முத் : வேண்டாம் இங்கேயே இருக்கிறேன்... (அவனிடம் ஓடி) பூங் : என் கண்ணா; என் அருகே வா!... முத் : ஆ!... பூங் : முத்தா...முத்தா... முத் : இளையராணி! உங்கள் தகுதிக்கு இது அழ கல்ல...கல்யாணமே வேண்டாம் என்று கன்னிப் பெண் ணை வாழ சங்கணம் கட்டிய நீங்கள் கண்ணு வாராய் என்று என்னை அழைக்கிறீர்கள்?... பூங் : முத்தா!...என் கண்ணா!... முத் : போதும் யுவராணி! ஞாபகமில்லையா உங்க ளுக்கு?...என் தாயார் என்னைத்தனியே விட்டுவிட்டு அரண் மனை வேலைக்கே கவனிக்கும் போது—சிறுவனை விளை யாடிய என்னை சீவி சிங்காரித்து வாரி அணைத்து மகிழ்வீர் களே—அப்பேற்பட்ட தாங்களா இந்த அக்கிரமத்துக்குத் துணிந்து விட்டீர்கள்... பூங் : இன்பமே!...இதைக்கேள்... முத் : கேட்க வேண்டாம்...கோமானின் தங்கை நீங்கள்...ம்...நானோ குதிரைக்காரன் ... ராஜாபர்த்துரஹரி கதைதான் அம்மா கேள்விப்பட்டிருக்கிறேன்...இது அதை விட வேடிக்கையாக இருக்கிறது... பூங் : முத்தா?... முத் : சரி சரி...இனியும் நான் இங்கே இருந்தால், அடங்கிக் கிடந்து இவ்வாறு அலமோதும் உங்கள் ஆசை வெள்ளத்திலே எங்கேயோ ஒரு ஆபத்தான மூலைக்கு அடித்துச் செல்லப்படுவேன்...ம்...இந்த அடங்காத பிரியத்தை உங்களே அடைய முடியாமல் தவித்து பிரமச் சரிய விரதம் பூண்டிருக்கும்...வேங்கைநாட்டு மன்னனிடம் காட்டினால் இந்த நாட்டுக்கு விடுதலையாவது கிடைக்கும்... நான் போய்வருகிறேன்... பூங் : முத்தா...நில்... முத் : கூடாது...பூங்காவனத்திலே புயல் புகுந்து விட் டது, அதை எதிர்த்து நிற்க என்னால் முடியாதம்மா முடி யாது; வருகிறேன்!