களஞ்சியப் பகுதி 14
குதிரைக் கொட்டடி
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
முத்தன், வாளை சரிபார்த்துக் கொண்டிருக் கிறான். அங்கே பூங்காவனம் வருகிறாள்.... பூங் : முத்தா!... முத் : இளையராணி! என்னவேண்டும் தங்களுக்கு?... பூங் : ஒன்று மில்லை...உனக்கும் சுகதேவனுக்கும்... முத் : ஆமாம் ராணி...ஏதோ ஆத்திரத்தில்.... பூங் : உம்...யார் அந்த முத்தாயி...? முத் : (திகைப்பு; மெளனம்...) பூங் : சொல்ல மாட்டாயா?...உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவள்யார்?....அழகிதானா?....அருங் குணவதியா?...உனக் கேற்ற சுந்தரிதானா?...சொல்ல மாட் டாயா?...முத்தா!....அந்தப் பெண்ணுக்காக—நீயும் இள வரசனும் பெரிய யுத்தமே நடத்தி இருக்கிறீர்களா?.... முத் : அம்மணி!.... பூங் : உங்கள் தகராறின் விளைவு என்ன ஆகி விட் டது தெரியுமா...? உன்னுடைய வேலைக்கே ஆபத்து வந்து விட்டது... உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை யும் இந்தப் பாவி இழந்து விட்டேன்... முத் : இளையராணி!... பூங் : அப்படி அழைக்காதே... [சுகதேவின் குரல் கேட்கிறது. பூங்காவனம் மறைந்து கொள்கிறாள். திரிசங்கு வருதல்...] சுக : என்ன எதிர்ப்பதா?...என்னை எதிர்க்க ஈரேழு பதினறு லோகத்திலும் மனிதர்கள் உண்டா? என்ன திரு சங்கு... திரி : ஊகூம்... சுக : பதினொரு லோகத்தில் என்ன? சந்திரமண்ட லத்திலும் மனிதர் கிடையாது..சூரியமண்டலத்திலும் கிடை யாது...நட்சத்திர மண்டலத்திலும் கிடையாது... திரி : கிடையாது தம்பி...கிடையாது...உங்களே எதிர்க்க ஒருத்தரும் கிடையாது... சுக : ஒருத்தன் இருக்கான்—அவனும் அழிஞ்சான்; ...யாரு?...அவன்தான் இந்த முத்தன்...ஏ, முத்தா!...நீ செய்த குற்றத்திற்காக வழக்கு...விசாரணை...தீர்ப்பு...எது வும் கிடையாது...தண்டனையை ஏற்றுக் கொள்...... உனக்கு இனி இங்கு வேலை கிடையாது... முத் : நன்றி... சுக : நன்றியா?...அங்கீகரிக்க முடியாது. திருப்பப் பெற்றுக் கொள்...திரிசங்கு...அரண்மனை வேலை மட்டு மல்ல ஊர்முழுதும் அறிவித்து விடு!...நமது அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த இடத்திலும் யாரும் இந்தப் பயலுக்கு வேலை கொடுக்கக் கூடாது...வேலை கொடுத்தால்—வால் நறுக்கி விடுவேன்...தோல் உரித்து விடுவேன்...கால் முறித்து விடுவேன்...ஓலை கிழித்து விடுவேன்... முத் : ஏன்!...இனிமேல் சொல்ல 'ஓ' கிடை யாதா?...மாலையைப் பிய்த்து விடுவேன் என்று சொல்லுமே! சுக : என்ன...என்ன...மாலையைப் பிய்க்கிறதா?... நான் என்ன குரங்கா? உம்...டேய் முத்தா! மறுபடியும் உனக்கும் எனக்கும் பெரிய போர் ஆரம்பமாகப் போகிறது ...மரியாதையாக உடனே அரண்மனையை விட்டு வெளியே போ!...தகப்பன் பெயர் தெரியாதக் கழுதை!... [முத்தன் கோபத்தைக் கண்டு சுகதேவ் வேக மாகப் போய் விடுகிறான்...] சுக : வா!...திருசங்கு!... [முத்தன் திகைத்து நிற்கிறான். பூங்காவனம் வந்து] பூங் : முத்தா!...போகும்போது என் மாளிகைப் பக்கம் வந்து விட்டுப் போ!...மறந்து விடாதே...அவசியம் வரவேண்டும்...கட்டாயம் வா... [போகிறாள். முத்தனுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது...பூங்காவனம் சொல்லிய வார்த் தைகள் அவனுக்கு திரும்பத் திரும்ப ஒலிக் கிறது...] முத் : என் வாழ்க்கையே குழப்பமாகி விட்டது...