களஞ்சியப் பகுதி 13

பலதேவர் மாளிகை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[பலதேவர் மனைவி, பூங்காவனம் இருவரும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். சுகதேவ் மாடியிலிருந்து இறங்கி வருகிறான். திரிசங்கு ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறான்.] சுகதேவ் : திரிசங்கு! காரியம் வெற்றி! ஜெயம்... ஜெயமே ஜெயம் திரிசங்கு : என்ன தம்பி? சுகதேவ் : அப்பா சம்மதித்து விட்டார். முத்தனை வேலையை விட்டு விலக்க உத்திரவு கொடுத்து விட்டார். பூங்காவனம் : என்ன! முத்தனை விலக்கவா? ஏன்? எதற்காக? சுகதேவ் : உட்...எதற்காகவா? நமது திரிசங்குவின் மகள் முத்தாயியின் கையைப் பிடித்து இழுத்தான். நான் அதைக் கண்டித்தேன். கன்னத்திலே சரியான அறை. ராணி : என்ன? சுகதேவ் : ஆ! ஆ! நான் கொடுத்தேன் அவனுக்கு. பூங்காவனம் : அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாயா? ஏழையை அடிப்பதில் ஒரு உற்சாகமா உனக்கு? [முதுகைத் தடவிக் கொண்டு] சுகதேவ் : உம்—நடந்த விஷயம் உனக்குத் தெரி யாது அத்தை. தெரிந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டாய். பூங்காவனம் : சுகதேவ்! முத்தனை விலக்க வேண் டாம். அவனுக்கு நம்மைத் தவிர வேறுயார் இருக்கிறார்கள்? பாவம் அனாதை—அவன் எங்கு போவான். சுகதேவ் : அத்தே! கல்யாணமே வேண்டாமென்று கன்னியாக இருக்கும் நீ கடவுளை நினைத்துக் கொண்டு ஜப மாலை உருட்டுவியா? இந்த வம்புக் கெல்லாம் ஏன் வருகிறாய்? பூங்காவனம் : பார்த்தீர்களா அண்ணி உங்கள் மகன் பேசுவதை. ராணி : சுகதேவ்! சும்மா இரு. சுகதேவ் : சரிசரி! வா; திரிசங்கு [பூங்காவனம் முகவாட்டம்]