களஞ்சியப் பகுதி 12
தென்றல் மாளிகை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
வீரன் : வாங்க...வாங்க...நீங்க தானே வேதாளம்? வேதாளம் : ஆமாம். வீரன் : அது என்ன, வேதாளம் என்று பெயர் வச் சிருக்கீங்க. உங்க அப்பா, அம்மா விக்கிரமாதித்தன் கதை படிக்கிறது உண்டா? வேதாளம் : உண்டு; உண்டு—ஏன்? வீரன் : விக்கிரமாதித்தன் கதையிலே ஒரு வேதாளம் வருது—அதைப் படிக்கும் போது நீங்க பொறந்திருப்பீங்க அதனாலே உங்களுக்கு வேதாளம்னு பேரு வச்சிருப்பாங்க. நல்ல வேளையா கிஷ்கிந்தா காண்டம் படிக்கும்போது நீங்க பொறக்காமே இருந்தீங்களே. வாங்க! வாங்க! [வேலழகன் வருதல்; வேதாளம், வீரன் வணங்குதல்] வீரன் : பிரபு! இவர்தான் தாங்கள் கூப்பிட்டு அனுப்பிய வேதாளம். வேலழகன் : ஓ! வேதாளம்! வாரும். உம்மைப்பற்றி நான் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். பலதேவரும் சொன்னார் மிகுந்த திறமைசாலி என்று. நான் வந்திருக்கிற காரியம் உமக்குத் தெரியும்; படைக்கு ஆள் திரட்ட என்று. அதற்கு நீரும்... வேதாளம் : நானா! அய்யோ! எனக்கு வாளைத் தூக் கக்கூட சக்தியில்லை. வேலழகன் : நீர் படையில் சேர வேண்டாமய்யா... கொஞ்சம் ஆட்கள் பிடித்துக் கொடும். வேலையில்லாதவர் கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். வேதாளம் : படையில் சேருவதென்றால் பயப்படு வார்களே. வேலழகன் : பலி பீடத்திற்கு வருவதற்கு ஆடு கூடத்தான் பயப்படும். அதற்காகத்தான் மஞ்சள் நீர் தெளித்து, மலர் தூவி, ஆகாரத்தையும் எதிரே நீட்டி ஆசை காட்டுவது; முயற்சி பண்ண வேண்டும். வேதாளம் : சரியான பேச்சு; தங்கள் உத்தரவுப் படியே வேலையை ஆரம்பிக்கிறேன். இன்னொரு விண் ணப்பம். வேலழகன் : என்ன? வேதாளம் : இந்த ஊரில் ஒரு பெரிய சாமியார் இருக்கிறார். அவர் பேச்சை தெய்வப் பேச்சாக எல்லோரும் எண்ணுவார்கள். அவரிடம் சொல்லி படைக்கு ஆள் சேர்க் கும் பிரச்சாரத்தைச் செய்யச் சொன்னால் நமது வேலை சுலப மாக முடிந்து விடும். வேலழகன் : பொருள் எதுவும் தர வேண்டுமோ அவர் அருளைப் பெற. வேதாளம் : பொருளா? அவர் வாங்கவே மாட்டார். அவர் கையால் பொருளைத் தொடுவதேயில்லை. மடத்தில் ஒரு உண்டியல் இருக்கிறது. அதில் போட்டுவிட வேண்டும்.