களஞ்சியப் பகுதி 11

ஆற்றங்கரை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

முத்தாயி : தேடக் கிடைக்காத தங்கம் நீங்கள்...உங்களிடமிருந்து என்னைப் பிரித்துவிட முயலுகிறார் அப்பா. முத்தன் : உன் அப்பா நினைப்பதும் சரிதானே. இளவரசன் சுகதேவ் எங்கே! நான் எங்கே! அரண்மனையிலே குதிரை தேய்ப்பவன் நான்... தாயை இழந்தவன்...தகப்பன் யாரெனத் தெரியாதவன்...உற்றார், உறவினர் அற்றவன்...தனி மனிதன். முத்தாயி : தனி மனிதா...நட்சத்திரங்கள் கூட்டமாய்த்தான் இருக்கின்றன. நிலவு தனியாகத் தானிருக்கிறது. ஆனால் அல்லி மலர் எதிர்பார்ப்பது நிலவைத்தானே? முத்தன் : என் அல்லி-பாளையக்காரர் சம்பந்தியாக ஆசைப்படும் உன் அப்பா—இந்தப் பாரிக்கா உன்னை அளிக்கப் போகிறார்? கனவு...கனவு.. முத்தாயி : கனவையும் பலிக்க வைக்கிறேன். கண்ணா...கவலையை விடுங்கள்...எங்கே என்னைப் பாருங்கள்; பார்க்க மாட்டீர்களா? என் முகம் உங்கள் கவலையைத் தீர்க்கும் மருந்தாக இல்லையா? [முத்தன் பார்த்தல். இருவரும் புன்னகை] முத்தன் : மருந்துதான்...என் மாணிக்கவல்லி! கவலை தீர்க்கும் மருந்துதான்...இந்தக் கள்ளமிலா வெள்ளி நிலவு. துன்பச் சுவை குடித்துவிட்ட எத்தனை எத்தனை பொல்லாத இரவுகள் சொல்லாமல் ஓடியிருக்கின்றன, சுந்தரி...உன் சோபித முகத்தை நினைப்பதாலேயே...ஏழைதானே நான் என எண்ணி ஏங்குவேன்...ஏழைக்கு மாளிகைக்காரனுக்கும் கிடைக்காத ரத்தினத்தைப் பெற்றிருக்கும் நீயா ஏழை என்று அடுத்துக் கேட்கும் உன் அழகின் எல்லையை இன்னும் அறிய முடியாத என் கண்கள். இன்பமே! நீ எனக்கு வேதனை தீர்க்கும் மருந்துதான்...இணையில்லா விருந்துதான்.... [தழுவுகிறார்கள்] முத்தாயி : ஸ...பறக்காதீர்கள். முத்தன் : வசந்தத்தின் ஸ்பரிசத்திலே வானம்பாடி பறக்காமலிருக்குமா? முத்தாயி : பறப்பதற்கு ஒரு இறக்கை போதாது. முத்தன் : அதற்குத்தான் உன்னையும் அழைக்கிறேன். முத்தாயி : ஆமாம்! எங்கே பறப்பது? முத்தன் : நீலநிற வானத்தின் விளிம்பிலே, கோலஞ்செய் மேகக் கூட்டத்தின் இடையிலே—அருவியின் மேலே—அழகுச் சோலையின் சுற்றப் புறங்களிலே— [சிரிக்கிறாள்] என்ன முத்தாயி சிரிக்கிறாய்? முத்தாயி : கேள்விப்பட்டிருக்கிறேன்....கவிஞன்... காதலன்...பித்தன்...மூவரும் ஒரே வகை என்று. கவிஞன் வானத்தைத் தாமரையைப் பார்த்து 'ஏ, விண்மீன்களே! யாரைப்பார்த்து கண் சிமிட்டுகிறீர்கள்' என்று சண்டைக்கு போவானும். காதலனோ வெண்ணிலவைப் பார்த்து-'என் காதலி எங்கே என்று' கேட்டுப் புலம்புவானும். நிலவைத் தூது போகச் சொல்லுவானும். அந்த இருவருமே பித்தர்கள் என்பார்கள் வேடிக்கைக்கு...அது உண்மையாகத்தான் தெரிகிறது, உங்களைப் பார்க்கும்போது... [தொடுகிறாள்] முத்தன் : உஸ்...தொடாதே...நான் தான் பித்தனா யிற்றே. முத்தாயி : பித்தனானும் என் முத்தனல்லவா? பித்தா! பிறைகுடி! பெருமானே! [தொடுதல்] முத்தன் : ஸ்...அம்மா. இரு முத்தாயி. முத்தாயி : ஏன்! தீண்டினால் திருநீறுகண்டமா? [தொடுதல்] முத்தன் : ஸ்...அம்மா. இரு முத்தாயி. முத்தாயி : அதுதான்! [சுகதேவ், திரிசங்கு] சுகதேவ் : ஆ! சரிதான்..சரிதான்..மால் நன்னோரம்.. சோலையின் ஓரம்... திரிசங்கு : இளவரசே! நீங்கள் தவறாக நினைக்காதீர்கள், என் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆரம்பித்திருக்கிறான் இந்தப் பயல். ஏ அறிவு கெட்ட பயலே! என்ன காரியமடா? முத்தாயி : அப்பா! திரிசங்கு : நீ பயப்படாதேயம்மா-அவன் என்னை ஒன்றும் செய்துவிடமாட்டான்-சும்மா பெண்கள் மிரட்டுகிற சோம்பேறிப் பயல். முத்தாயி : இல்லையப்பா. [திருக்கிட்டு] திரிசங்கு : எனக்குத்தான் எல்லாம் புரிகிறதே...நீ ஏன் இங்கெல்லாம் தனியாக வருகிறாய்? முத்தாயி : சொல்லவதைக் கேளுங்கள். திரிசங்கு : நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்; நீ போம்மா வீட்டுக்கு...இந்தப் பாவிக்கு நேராக நிற்காதே... தவறு...போம்மா-போகிறாயா இல்லையா? உம்...போ... [முத்தாயி போகிறாள் கலங்கியபடி] கடவுளே! என் பெண்ணின் மானத்தைக் காப்பாற் றினாய்...உனக்கு கோடி நமஸ்காரம்...இளவரசே! பார்த்தீர் களா இவன் அக்கிரமத்தை... [முத்தன் முதுகில் தட்டி] சுகதேவ் : ஏ முத்தா! முணு முணுக்கிறதா முதுகு? அரைப்பட்டினி ஆண்டிப் பயலே! அழுதைக் கழுதை. முத்தன் : தீர்ந்ததா அகாதி? சுகதேவ் : பேசாதே...பேடி நாயே! அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழி இல்லை. காதல் பண்ணுகிறானும் காதல். முத்தன் : சீமான் மகனே! இருதயத்துக்கும், இரைப்பைக்கும் வித்தியாசம் தெரியாதவனே! உனக்கு காதல் இலக்கணம் சொல்லித் தருகிறேன்...கேள்... பன்னீரிலே குளித்து, பழரசத்திலே நீந்தி, கன்னியர் புடைசூழ கட்டிலறைக்கு சென்றுவந்தான் வருவேன் என்று சொல்லவதல்ல காதல்...காதல் ஒரு நிலவு...அது ஒரு தென்றல்...மாளிகைக்கு மட்டுமல்ல. மண் குடிசைக்கும் வரும்...காதல் பணமல்ல; உன் பளிங்கு மண்டபத்தோடு நின்றுவிட... திரிசங்கு : சரிதாண்டா; அதிகப் பிரசங்கித்தனத் திலே அயோக்கியத்தனத்தை மறைக்க முடியாது. முத்தன் : அது எப்படி முடியும்...அதற்கு பாளையக் கார மகனைப் பிறக்க வேண்டுமே... சுகதேவ் : சீ! தகப்பன் பெயர் தெரியாத தவறுதலில். முத்தன் : உனக்குத் தெரியுமா தகப்பன் பெயர்? [இருவருக்கும் சண்டை] சுகதேவின் தொப்பி மேலே சென்று விழுகிறது. முத்தனின் அடியால் கீழே விழுகிறான் சுகதேவ். பின் எழுந்து திரிசங்கு வைத்திருக்கும் கைத் தடியை வீரத்தோடு வாங்கி முத்தனைத் தாக்கு வதுபோல் சென்று மரத்தில் தொத்தி இருந்த தன் குல்லாவை எடுத்துக் கொண்டு முத்த னிடம் 'ஏய் முத்தா' ஜாக்கிரதை; ஜாக்கிரதடா என்று தண்ணீரில் வீழ்ந்து விடுகிறான்.