களஞ்சியப் பகுதி 7

சுகதேவன் அறை.

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[சுகதேவ் கண்ணாடியில் தன் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறான். திரிசங்கு கடிதத்துடன் அங்கு வருகிறான்] சுகதேவ் : என் அழகைக் காண இந்தக் கண்ணாடி போதாதே ஹா-ம்---திரிசங்கு: எனக்கா ஓலை? திரிசங்கு : இல்ல ைதம்பி. எனக்குத்தான். சுகதேவ் : யாரிடமிருந்து? திரிசங்கு : அவன் ஒரு வேலையற்றவன். பொழுது விடிந்தால் என் உயிரை வாங்குவதே அவனுக்கு வேலை. சுகதேவ் : உயிரை வாங்குறானா? யாரப்பா அந்த எமன்? திரிசங்கு : அதை என் தம்பி கேட்டறிங்க. எனக்கு ஒரு மருமகப் பயல் இருக்கிறான். அவனுக்குப் பெண் வேண்டுமாம். சுகதேவ் : ஏன்? பிறப்ப தெல்லாம் ஆணாகப் பிறக்கிறதோ? திரிசங்கு : இல்ல ைதம்பி இல்லை. கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம். சுகதேவ் : கல்யாணத்துக்குப் பெண்ணுதான் வேணும். வேறே என்ன வேணும்; அதுதானே திருமணத்துக்கு மூலப் பொருள். திரிசங்கு : தம்பி! மாம் பழத்தால் வெளவால்களே வா என்று அழைக்கிறது. சுகதேவ் : ஆமாம்! ஆமாம்! பழுத்த மாம்பழமும், பாழடைந்த மண்டபமும் வெளவாலே வா என்று அழைப்பதில்லை. சரி அதுபோல...... திரிசங்கு : என் மகள் பருவமடைந்து விட்டாள். பயல்கள் வில் வீசுகிறார்கள், அதற்குத்தான் ஓலை எழுதி இருக்கிறேன் இந்த உதவாக்கரை. என் மகளின் அழகென்ன, குணமென்ன—அத்தான் முறைக்காக மட்டும் இந்தப் பயல் உரிமை கொண்டாடி விட முடியுமா தம்பி. சுகதேவ் : ஓஹோ! அவ்வளவு அழகா உன் மகள்— திரிசங்கு : நீங்கள் பார்த்ததே இல்லையா? சுகதேவ் : இல்லையே உன் மகளின் பெயரென்ன? திரிசங்கு : முத்தாயி — முத்தாயி என்றால் முத்தாயிதான். சுகதேவ் : உம்—காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே. திரிசங்கு : இல்ல ைதம்பி. இது காக்கை அடை காத்த குயிலின் குஞ்சு. சுகதேவ் : திரிசங்கு! வாயேன் உன் வீட்டுக்குப் போகலாம். திரிசங்கு : விளையாடாதீங்க—அரண்மனைக் காவல்காரன் வீட்டுக்கு இளவரசர் வருவதாவது ... வேடிக்கை வேடிக்கை. சுகதேவ் : என்னிடத்திலே அந்த உயர்வு, தாழ்வு இல்லையென்பது உனக்குத் தெரியாதாக்கும். நீ என் தங்கைக்குத்தான் வேலைக்காரன். எனக்கு ஒரு வயதான தோழன். சரிதானா? திரிசங்கு : நான் பாக்கியசாலி. சுகதேவ் : வா போவோம். [முத்தன்-முத்தாயி காதல் கீதம் பாட்டு முடியும் தருவாயில் சுமதி தன் இடையில் இருபுறங்களிலும் இரண்டு குடம் தண்ணீருடன் வருகிறாள். குடங்களை தூரத்தில் வைத்துவிட்டு முத்தன், முத்தாயி இருவரையும் பார்த்து தன் இரு கண்களையும் பொத்திக் கொண்டு அவர்களிடம் வந்து] சுமதி : முத்தாயி! போகலாமா? முத்தாயி : என்ன சுமதி! கண்ணை மூடிக்கொண்டாய்? [கண்ணைத் திறந்து கொண்டு] சுமதி : கார்யமாகத்தான். நேரமாகிறது. வா போகலாம் முத்தாயி : போய் வாட்டுமா? சுமதி : அந்த உத்திரவுமட்டும் அங்கே கிடைக்காது. முத்தாயி : ஏது உன் தோழி பெரிய கைக்காரிதான் போலிருக்கு. சுமதி : கைக்காரி மட்டுமல்ல—கால்காரி—கழுத்துக்காரி—தலைக்காரி. முத்தன் : போதும்! போதும்! நீ வேறு காரி காரி முகத்திலே துப்பாதே. முத்தாயி : சரி! நான் வருகிறேன். ஏ சுமதி! கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக் கொள். இதோ வந்து விடுகிறேன். [சுமதி திரும்பி நிற்க, "இச்" என்ற ஒரு ஒலி சுமதியின் முகத்தில் எதிரொலிக்கிறது]