களஞ்சியப் பகுதி 6

வாள் பயிற்சிக் கூடம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

★ சுக : வீராதி வீரன் நான்—எதிரிகள் எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் சரி—அவர்களை எதிர்த்து முறியடிப்பேன்...அக்ரோணிக் கணக்கிலே சேனைகள் வந்தாலும் சரி! அவைகளைப் பானைகளைப் போல் அடித்து நொறுக்குவேன், கோட்டைகள் முற்றுகையிட்டாலும் சரி...கொலு மண்டபத்தில் நுழைந்துவிட்டாலும் சரி...எதிர்த்து...விரட்டி...அடித்து...உலகத்து பகைவர்களைத் தாக்கித் தவிடு பொடியாக்கி...ரத கஜ துரக பதாதிகள் எல்லாவற்றையும் படு சூரணமாக்கி விடுவேன், உம்...ஆமாம்...எந்தக் கையிலே கேடயம் வசிக்கிறது, எந்தக்கையிலே கத்திவசிக்கிறது...அடேய் அதை மட்டும் சொல்லிவிடடா, (முத்தன் வருகிறான் ஆ!...இவனைக் கேட்டால் தெரியும்...முத்தா!...இன்னும் இரண்டு நாளில் நான் பெரிய வாள் வீரனாகிவிட வேண்டும். முத் : ஓ...வாள் வீரனா விடலாம். சுக : என்ன! வாள் வீரனா?... முத் : அடடே தவறி வந்துவிட்டது. பரவா இல்லை...வாள் வீரர் அனுமாரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்களே?...... சுக : ஆமாம்...ஆமாம் அசோக வனத்தில் சீதையிடம் போனவர்... சரி...சரி...வா... (வாள் வீச ஆரம்பிக்கின்றனர்; முத்தன் கொஞ்சம் வேகமாகச் சுழற்ற......) ம்....இவருகிட்டயா நடக்கும். (மீண்டும் சண்டை) ஏப்...இரு...இரு எங்காவது படாத இடத்தில் பட்டு உயிர் போய்விடப் போகிறது...கொண்டா அதை... [அவனே போய் நீண்ட வாளொன்றும் கட்டாரி ஒன்றும் எடுத்து வருகிறான் அங்கு நிற்கும் வீரனைப் பார்த்து.] சுக : டேய்...நீ போ, (முத்தனிடம்) இந்தா...இதைப்பிடி...இப்போது பார்ப்போம் யார் ஜெயிப்பது என்று... முத் : இருங்கள் இது போர் செய்யும் இலக்கணமே அல்ல...... சுக : இலக்கணமே எனக்குத் தேவை இல்லை. (முத்தன் மீது வாள் வீச. அது பட்டு விடுகிறது. இதை கவனித்த பூங்காவனம் ஓடி வருகிறாள்......) பூங் : சுகதேவ்!......என்ன இது விபரீதமான விளையாட்டு. சுக : கத்தி விளையாட்டு. நீ ஏன் அத்தை இதில் தலை யிடுகிறாய்! முத்தா! காயத்துக்கு மருந்து போடு நான் வருகிறேன். [சுகதேவ்போகிறான் உடனே பூங்காவனம் துணியைக் கிழித்து கட்டுகிறாள்....] (திகிலுடன்) முத் : இளையராணி... பூங் : பரவா இல்ல ைமுத்தா, நானே கட்டி விடுகிறேன். [அவள் கண்களில் நீர் கலங்குகிறது....] முத் : யுவராணி என் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்... பூங் : ஒன்றுமில்ல ைமுத்தா...இந்தா இதை சாப்பிடு நான் வருகிறேன்—யாராவது வந்து விடுவார்கள்... மறைத்து வைத்திருந்த பழங்கள் கொடுத்துவிட்டு போய் விடுகிறாள் முத்தன் பழங்களுடன் திகைத்து நிற்கிறான்.