களஞ்சியப் பகுதி 5
குதிரைக் கொட்டடி
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
★ குதிரை கொள் தின்று கொண்டிருக்கிறது. ஒரு பையன் மெள்ள மெள்ள திருட்டுவிழி விழித்துக் கொண்டு அந்தப் பக்கம் வருகிறான்...பிறகு கொள்ளுப்பையில் கையை விட்டு, கொள்ளை எடுத்து அவனும் சாப்பிடுகிறான்...அப்போது திருசங்கு அங்கு வருகிறான்...பையனின் தலையில் ஒரு அடிவிழுகிறது... திரு; திருட்டுக் கழுதை, யாருடா நீ! என்னடா முழிக்கிறே—துப்புகிறே...ம...துப்பு...இனிமேல் வருவியா இங்கே ஆங... [...முத்தன் வந்துபிடித்துக் கொள்கிறான்...] முத் : ஏன்...அவனை அடிக்கிறீர்கள்...... திரு : நீ வந்துட்டியா—சிபார்சுக்கு...முத்தா—நீ குதிரை பார்த்துக் கொள்கிற லட்சணம் நன்றாயிருக்கிறது திருட்டுப்பய பிள்ளைகள் எல்லாம் அரண்மனைக் குள்ளேயே வந்துட்டுதுங்க திருடுரத்துக்கு! முத் : பசி பொறுக்காமல் இந்தப் பசிப் பையன் கொஞ்சம் கொள்ளை சாப்பிட்டு விட்டால் அது திருட்டா? உலகத்தில் யார் யாரோ எதை எதையோ திருடுகிறார்கள்... திரு : சரிதான் பாளையக்காரர் சொத்தை நீயே பசி காரர்களுக்கு பங்கு போட்டு கொடுத்திடுவே போலிருக்கு. முத் : நான் கொடுக்காவிட்டாலும். அந்தக் காலம் வந்துதான் போகிறது. இந்தா தம்பி நீ ஓடிப்போ...... (கொள்ளை எடுத்துக் கொடுக்கிறான்) திரு : காவேரி எவ்வளவு நல்லவ, அவ வயத்திலே வந்து இப்படி ஒரு புள்ளே பொறந்துதே!...... (போகிறான்—ஒரு வீரன் வருகிறான்.) வீர : முத்தா!...வாள் வித்தை கற்றுக் கொள்ள—குமார ராஜா வருகிறார்....... முத் : யாரது! குமார ராஜாவா? அது சரி!...... வீர : ஆமாம்! இளவரசன் சுகதேவ்...... முத் : இளவரசன், குமாரராஜன்!...இவன் வேறல்ல புதுப் புது பட்டமா அள்ளி வீசுகிறான்......எப்பா கொஞ்சம் தகுதி பார்த்து கொட்டப்பா பட்டத்தை; ஏது...இப்ப என்னா வாள் பயிற்சி கத்துகிட்டு பழுதாருக்கு விடுதலை வாங்கித் தரப் போகிறாருக்கும்......பெரிய வீராதி வீரா...சரி...சரி...போ...இதோ வரேன்.