அறத்துப்பால் · இல்லறவியல் · விருந்தோம்பல்

குறள் 86விருந்தோம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 18 · ஸ்கேன் 51 · மூலமும் சான்றும்