நாதம் எழாது - நரம்புதான் அறும்
No Music Will Rise — Only the String Will Snap
மு. கருணாநிதி
நாதம் எழாது - நரம்புதான் அறும்
புத்தர் ஒரு வாலிபனைச் சந்தித்தார். அந்த வாலிபனிடத்தில் புத்தர் சொன்னார் :- “ஓ வாலிபனே! வீணையினுடைய நரம்பை மேலும் அதிகமாக முடுக்கினாலும் அல்லது அதிகம் தளர்த்திவிட்டாலும் நல்ல இசையைக் கேட்க முடியாது.”
“வீணை நரம்பில் இனிய நாதம் - இன்ப நாதம் - எழிலிசை கிளம்ப வேண்டுமானால் நரம்பு எந்த அளவுக்கு முடுக்கப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு முடுக்கப்பட வேண்டும். ‘நான் இப்படித்தான் முடுக்குவேன்’ என்று முடுக்கினால் நாதம் எழுவதற்குப் பதிலாக நரம்பே அறுந்துவிடும்.