பொருளடக்கம்

சங்கத் தமிழ்

முன்பக்கங்கள்

முன்பக்கங்கள்

அச்சுப் பக்கம் II–IX visible; other preliminaries unnumbered · ஸ்கேன் 116

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

# சங்கத் தமிழ்

கலைஞர்
மு.கருணாநிதி

காட்சிப் பதிவு

மலர்கள் மற்றும் ஓலைச்சுவடிக் கட்டுகள் இடம்பெறும் வண்ண அட்டை.

# சங்கத் தமிழ்

கலைஞர்
மு.கருணாநிதி

ராக்ஃபோர்ட்
பப்ளிகேஷன்ஸ் (பி)லிட
சென்னை-83

பிந்தைய நூலக ஒட்டு

இப்படிக்குரிய குறிப்பு — நூலின் உரை அல்ல

பேராசிரியர் முனைவர் இரா. இளவரசு
நூலக நூல்கள்

இப்படிக்குரிய குறிப்பு — நூலின் உரை அல்ல

நூற்கொடை: பேராசிரியர் இரா. வேலம்மாள்
பேராசிரியர் இளவரசு நினைவு அறக்கட்டளை

இப்படிக்குரிய குறிப்பு — நூலின் உரை அல்ல

இந்த ஒட்டு மூல நூலின் தொடர்ச்சியான அச்சு உரையிலிருந்து தனியான பிந்தைய நூலக/உரிமைச் சான்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கத் தமிழ்

கலைஞர்
மு. கருணாநிதி

வெளியீட்டாளர்

ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ்
(பி) லிட்.
33, 10வது நிழற்சாலை,
அசோக்நகர்,
சென்னை 600 083.
தமிழ்நாடு - இந்தியா

# சங்கத் தமிழ்

கலைஞர்
மு.கருணாநிதி

ராக் ஃபோர்ட்
பப்ளிகேஷன்ஸ் (பி)லிட்.,
சென்னை-83

நூல் அளவை

தலைப்பு: சங்கத் தமிழ்.
ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி.
பொருள்: இலக்கியம் (சங்கத் தமிழுக்கு, எளிய நடையில் விளக்கக் கவிதை வரிகள்)
வெளியீட்டகம்: ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். - சென்னை - 600 083.
வெளியீடு: 4.
பதிப்பு: ஒன்று.
தாள்: மாப் லித்தோ.
அளவு: 14 x 21½ சி.எம்.
படிகள்: 3,000.
காலம்: ஆகஸ்ட் 1987.
விலை: ரூ. 125/- (ரூபாய் நூற்று இருபத்தி ஐந்து)
எழுத்து: 18 புள்ளி.
ஓவியங்கள்: கோபுலு - ஜெயராஜ் - மாருதி
உமாபதி - மருது.
தலைப்புகள்: ஓவியக் கவிஞர் அமுதோன்.
ஒளி அச்சுக் கோர்வை: காந்தளகம் - சென்னை-2.
அச்சிட்டோர்: சீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் - சிவகாசி.

முன்னுரை

காட்சிப் பதிவு

முன்னுரை என்ற தலைப்பின் கீழ் முழுப் பக்க கையெழுத்துக் கடிதம் உள்ளது.

மூலத்தின் நிலையான வரம்பு

இப்பக்கத்திலுள்ள முழுப்பக்கக் கையெழுத்துக் கடிதம் படியெடுக்கப்படவில்லை; அதன் சொற்கள் இங்கு தரப்படுவதில்லை. இது இவ்வெளியீட்டின் நிலையான முடிவு. பக்கத்தின் தலைப்பும் அதன் காப்பக விவரிப்பும் மட்டுமே உள்ளன.

கீ. இராமலிங்கனார் மடல்!

நாள் : 19-10-1985.

கனிந்த அன்புமிக்க கலைஞர் பெருமானார் அவர்கள் தித்திக்கும் திருமுன்னுக்கு,

26.7.85 நாளிட்ட தங்கள் தேன் என இனிக்கும் திருமடலுக்கு இன்றே விடை வரைகின்றேன். பெற்றதுமே பெருமிதத்தோடு படித்துப் பெருங்களிப்படைந்தேன். நன்றிகூர்ந்தேன். தங்கள் அன்பின் கட்டளையை நிறைவேற்றுவதையே முதற் கடமையாகக் கொண்டேன்.

சங்கத் தமிழ் என்னும் கலைநலமும் கவிநலமும் ஒருங்கே பொருந்திய நூலுக்கு ஒரு கட்டுரை வடிவிலே ஓர் அணிந்துரை வரைவதிலே முயன்று நின்று முடித்தேன். அதற்கே பேராசிரியர் திரு. முருகேசனார் உதவி உடனிருந்து உறுதுணை புரிந்தது. என் உள்ளத்திற்கு உகந்த வகையிலே அது அமையாது போயினும், தங்கள் கட்டளையை ஒருவாறு நிறைவேற்றினேன் என்பது எனக்கு மனநிறைவு அளிக்கின்றது.

தள்ளாமையின் விளைவான தடுமாற்றத்தினால் கால் தவறிக் கீழே விழுந்து விட்டேன். இடப்புறச்சப்பை அடிபட்டு அசைக்க முடியாதபடி வலியும் ஏற்பட்டிருக்கிறது. படுக்கையில் இருக்கிறேன். உண்பதும் கழிப்பதும் கூட படுக்கையிலேயே நிகழ வேண்டியிருக்கின்றன.

நண்பர் பேராசிரியர் முருகேசனார் காண வந்தார். அவர் அன்பினை நாடி இதனை வரைய முடிந்தது. நேரில் வரவும், கலந்து உரையாடவும் வாய்ப்பிழந்த நிலையில் உள்ளேன். அணிந்துரையைத் தாங்களே செப்பனிட்டு அச்சுக்கு அனுப்பக் கோருகிறேன்.

தங்கள் கருத்தறிந்து மேலும் செய்ய வேண்டுவன இருப்பின் செய்து முடிக்க ஆயத்தமாய் உள்ளேன்.

அடியேனையும் ஒரு பொருளாகக் கருதி அணிந்துரை வரையப் பணித்த தங்கள் அன்பின் மாண்பு மாப்பெரிது. அதனைப் போற்றிப் பரவுகின்றேன்.

இங்ஙனம் தங்கள்

கீ. இரா.

அணிந்துரை

கலைஞர், கவிஞர், மூதறிஞர் மு. கருணாநிதி அவர்களின்
“சங்கத் தமிழ்”

“சங்கத் தமிழ்” என்னும் நூல், சங்க காலத் தமிழ்ச்சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்கியளிக்கும் இனிய பநுவல், உள்ளத்தைக் கவ்வும் பாங்கிலும், நெஞ்சத்தில் தோயும் செஞ்சொற்களாலும், வடிக்கப் பெற்றிருப்பதால், உள்ளபடியான ‘கவி-தை’ நூலாகும் இது. எதுகையையும், மோனையையும், சீரையும், தளையையும் தேடுவதில் சிந்தையைச் செலுத்திக் கொண்டிராமல், உள்ளிருந்து ஊற்றெடுக்கும் மொழியும் பொருளும் இயல்பாக இயங்குமாறு உரிமை நலம் வழங்கப் பெற்ற, உண்மைப் பாடல்களை உருவாக்கித் தரும் உயர் நூல், பட்டுச் சொல்லும் பான்மையால் பாடல்களாயின.

சங்க காலம் என்பது, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். இன்றுள்ள உலக மொழிகள் பலவற்றில், இலக்கியம் என்பதே எட்டிப்பாராதிருந்த காலம் அது. நம் முன்னோர், அந்நாளிலேயே சங்கமாகக் கூடியிருந்து தமிழை ஆராய்ந்தனர். இன்றும், என்றும், மறந்து போய்விடலாகாத, உயிர்த்துடிப்புள்ள செய்திகளைச் செம்மை சிவணிய மொழியில் சொற்படங்களாக்கி, நாம் எக்காலத்தும் நுகர்ந்து மகிழும் நல் உடைமைகளாக நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர். ‘சங்கு’ தமிழகம் அறிந்த, கண் கவரும் கடற் பொருளாகும். உள் குவிந்து, அமைந்த உலகம் நலியனைத்தையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு ஓம் என்னும் மூல ஒலியை உண்டாக்கும், வடிவம் அது. பேரறிஞர் பலர் ஒன்று கூடி, உள் குவிந்து ஒன்றி நின்று, ஓசை நயம் பூண்ட தமிழால் என்றும் நிலைத்திருக்கக் கூடிய மொழி ஓவியங்களைப்படைத்தளித்த நிறுவனமே ‘சங்கம்’ என்பது.

இந்நூலுள் விளக்கப்பெறும் பாடல்கள், மூன்றாம் சங்கத்தைச் சேர்ந்தன என்பர். அதற்கு முன் இரண்டு சங்கங்கள் இருந்தனவாகவும் கூறுவர். முதலிரண்டு சங்கங்கள் ஆய்ந்து படைத்த இலக்கியங்களுள் தொல்காப்பியம் தவிர மற்றவை இன்று நமக்குக் கிட்டவில்லை. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பது மரபு. எனவே தொல்காப்பியத்திற்கும்

முன்பு பல இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். அகத்தியம் என்னும் இலக்கண நூலும் முதல் சங்கத்தது என்பர். அது உருவாவதற்கு ஆதாரமாக பல இலக்கியங்கள் இருந்திருத்தல் வேண்டும். எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம் என்னும், அகத்திய நூற்பா இன்றும் புலவர்கள் வாயால் வழங்குவதைக் காணலாம். காலத்தின் கோலம்! முச்சங்கங்களுக்கும் முன்பும், நம் முன்னோர் ஆய்புகாலத்துக்கு உகந்தவாறு பல சங்கங்களை அமைத்துக் கொண்டு தமிழ் வளம் பரந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. காலத்தின் கேட்டினால், அடியோடு அழிந்து விடாமல், இப்போது கிடைத்துள்ள அளவாவது சங்கத்தமிழ் நூல்கள் நமக்குக் கிட்டியிருப்பதற்கு, நம் முன்னோரின் தமிழ்ப் பற்றினை நாம் போற்றிப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியால் பொத்தி உருச்செய்து, நீராலும், மண்ணாலும், காற்றாலும், நெருப்பாலும் பழுதுபடாமல் காத்து வைத்த அப் ‘பொத்தகங்கள்’ (பின்னால் இது ‘புத்தகம்’ ஆகிப் ‘புஸ்தகமும்’ ஆகி விட்டிருக்கிறது) இன்று நம் கைக்கு எட்டியிருப்பதே மாபெரும் வியப்பாகும்!

மூன்றாம் சங்கம் படைத்தும் திரட்டியும் வைத்துச் சென்ற நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம் என்பர். இவற்றுள் அகத்துறை, புறத்துறை பற்றிய பாடல்களைத் தொகுத்து வைத்த எட்டு நூல்களைக் கொண்டது “எட்டுத்தொகை” என்பது. அகத்துறைப் பாடல்கள் என்பது, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையில் நிலை நின்று, காதலிக்கும் இருவர் உள்ளத்து நிலவிய இருவரது உள்ளத்தையும் கதுவுவதா உணர்ச்சிகளைப்பற்றிச் சொல்வது இருவரது அகத் தளவில் நிகழ்ந்து இருவருக்கும் இன்பம் பயக்கும் உணர்வுகளாகும். அவ்வின்பம் இந்தத் தன்மையது என்று அவர்களாலேயே ஒருவருக் கொருவர் எடுத்தியம்பிக் கொள்ள இயலாது. மற்றச் செய்திகள் யாவும் புறத்துறையினவாகும். எட்டுத்தொகை நூல்களுள், ஐந்து அகப்பொருள் பற்றிக் கூறுவன. பரிபாடல் என்னும் நூலுள்ளும் அகப்பொருட்கள் வருகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு, பதிற்றுப்பத்து என்னும் இரண்டும் புறத்துறைச் செய்திகளைக் கூறுவன. இவையிரண்டில் புறநானூற்றுப் பாடல்கள் இந்நூலில் விளக்கப் பெறுகின்றன.

எட்டுத்தொகை நூல்களுள் முழுக்க முழுக்க அகப்பொருட் செய்திகளை கூறப்பெறும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களிலிருந்தும் பதினைந்து பாடல்கள் இந்நூலுள் விரிவுரைக்கப் பெறுகின்றன. அவ்வாறே புறநானூற்றிலிருந்து பதினைந்து பாடல்கள் விளக்கப் பெறுகின்றன. இவற்றை இயற்றியவர் பெண்பாலர் மூவர், ஆண்பாலர் பதினால்வர்.

இதுவரை வந்துள்ள மொத்தம் 21 இதழ்களில் வெளிவந்த பாடல்கள், இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முதல் பத்து இதழ்களில் வெளியான, 12 பாடல்களின் விளக்கமான செய்திகள், பின்வரும் கவர்ச்சியான பத்துத் தலைப்புகளில் அறிமுகம் செய்யப்பெறுகின்றன.

1.‘தகடூரான் தந்த கனி’2.‘பறம்பு மலைப் பாவேந்தர்’
3.‘செவிலி தேடிய சித்திரப்பாவை’4.‘வாடைக்காற்றில் வாடிய காதலி’
5.‘வாணன் மணந்த வண்ணத்திருமகள்’6.‘ஒரு பொதுமகளின் புலம்பல்’
7.‘மானங்காத்த மறவன்’8.‘துணை நின்றாள் தோழி’
9.‘பாவை புகழ்ந்த பன்றி’10.‘உலைக்களத்து இரும்பும் ஒரு துளி நீரும்’

விளக்கக் கவிதையைப் படித்துச் சுவைத்து வரும்போதே ஒவ்வொரு தலைப்பும், உரிய சங்கப்பாடலின் உள்ளீட்டை எத்துணை நுட்பமாகவும், பொருத்தமாகவும் நுணுகி அறிந்து சூட்டப் பெற்றிருக்கின்றது என்பதை உணர்ந்து உளங் களிக்கலாம். சங்கத்தமிழ்ப் பாடல்களைப் படித்து இன்புறும் எண்ணம் மங்கி வந்துவிட்ட இக் காலத்தில், அவற்றின் இலங்குகின்ற தன்மையை - இலக்கியப் பாங்கை - மக்கள் நுகரவொட்டாமல் - பயிலவொட்டாமல் புறக்கணிக்கத் தூண்டும் சிலருடைய போக்கு மிகுந்து வரும் இந்நாளில், அவற்றைப் போற்றிப் படிக்கும் ஆர்வத்தை பொதுமக்களிடையே வளர்க்கின்ற அரும் பணியைப் புரிகின்றன இத்தலைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்நூலாசிரியர் விளக்கக் கவிதைகள்.

இத்தமிழ்த் திருப்பணியை ஆற்றுவதுடன், பின் பகுதியான, பதினோர் இதழ்களில் வெளியாகியுள்ள பொருள் ஒருதலைக் காதல் என்னும் ஒரே தலைப்பில், ஒரு குறுங்காவியமாக உருப்பெற்று ஒளிர்கின்றது. ஒன்பது புறநானூற்றுப் பாடல்களையும், அகத் துறைச் செய்திகளையும் கொண்ட நூல்களான ‘நற்றிணைப்’ பாடல்கள் மூன்று, அகநானூற்றுப் பாடல்கள் ஐந்து, ‘குறுந்தொகைப்’ பாடல்கள் ஒன்று, ஆகிய ஒன்பதையும் வைத்துக்கொண்டு, எழில் குலுங்கும் குறுங்காவியம் ஒன்றை கற்பனை செய்து விட்டிருக்கும் ஆசிரியரின் அருங்கலைத்திறன் பெரிதும் போற்றத்தக்கதாகும்.

இந்நூலின் ஆசிரியர் ஒரு கவின் கலைஞராக மட்டும் அல்லாமல், இன் கவிஞராகவும் இலங்குகின்ற இருசிறப்புடையவர்கள். எனவே, தமது கலைநலத்தைக் கவிநலம் மிளிரும் இனிய தமிழ்க்கவிதையாக மலர வைக்கும் மாண்பு பூண்டவர்கள். ‘மூதறிஞராகவும்’ அவர்கள் விளங்குவதால் அறிவு முதிர்ந்த முறையில், பண்பு

பொலியும் பல செய்திகளைக் கவிதை உருவில் வடித்தளிக்கும் வளமை மிகுந்தவர்களாகின்றார்கள்.

‘டாக்டர்’ என்னும் அயல் மொழிச் சொல்லின் பொருள்: ஆசிரியர் - ‘அறியாமையைப் போக்குகின்றவர்’ - ‘அறிஞர்’ ஆகும். வெறும் ‘அறிஞர்’ மட்டுமல்லர். ஐயம் ஏற்பட்டால் தெளிவுபடுத்துகிறவர், குறை கூறினால் அதனைக் களைகின்ற திறல் மிக்க அறிஞர்களாகின்றவரே ‘டாக்டர்’. எனவே, அச்சொல்லுக்கு ‘மூதறிஞர்’ என்னும் தமிழ்ச் சொல்லே பொருத்தமானதாகும். ‘முனைவர்’ ‘பண்டாரகர்’ என்னும் சொற்களைக் காட்டிலும், ‘மூதறிஞர்’ என்னும் சொல்லையே நான் பயன்படுத்தி வருகிறேன்.

கலைஞரின் இக்கவிதைகளைப் படித்து நான் நுகர்ந்த தமிழ் ஓசை நயம், பொருள்நயம், சொல் நயத்தை மற்றாரும் நுகரும் வண்ணம், இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தமிழ்மொழி தெரியாதவரும், தமிழ் ஓசை அளிக்கும் செவி இன்பத்தை நுகரலாம். பலவகை பழநறுக்கும், நறுமணப்பொருளும், தேனோடு கலந்து இனிக்கும் தெவிட்டாத கனிக்கலவையே இந்நூல்.

இங்ஙனம்

பதிப்புரை

“சங்கத் தமிழ்” என்ற இந்த அரிய படைப்பு எங்களுக்கு மன மகிழ்வைத் தருகின்ற ஓர் உயரிய வெளியீடு! இலக்கியம், கலை, வரலாறு, வளர்ந்து வரும் அறிவியல், சட்டம் மற்றும் சமயம் ஆகிய துறைகளில் தலைசிறந்த படைப்புகளைப் புத்தகமாக வெளியிடுவது எங்களது குறிக்கோள்.

கலைஞரின் இலக்கியப் படைப்பான “சங்கத் தமிழ்” என்ற இந்த நூலை நாங்கள் வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்குப் பெருமை சேர்ப்பது. இந்த நூல் ஒரு நிரந்தரமான செல்வம் என்பதை உணர்ந்து - இந்நூல் எல்லாவகையிலும் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், எங்களது முயற்சிகளை ஒன்று குவித்து இப்புத்தகத்தை வெளியிடுகின்றோம்.

இந்த வெளியீட்டை நாங்கள் கொண்டு வர இதன் பதிப்புரிமையை எங்களுக்கு வழங்கிய கலைக்கனிப் பதிப்பகத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறோம். வண்ணப் படங்களை வரைந்து நூலுக்குப் பெருமை சேர்த்த ஓவியர்கள் கோபுலு - ஜெயராஜ் - மாருதி உமாபதி - மருது - ஆகியோருக்கு நன்றி.

தலைப்புகளைச் சித்திர வடிவில் அமைத்த அமுதோன் - கலைஞரின் வண்ணப்படத்தை எடுத்துக் கொடுத்த சுபா சுந்தரம் - எழுத்துக்களை நவீன முறையில் ஒளி அச்சுக்கோர்வையில் அமைத்துத் தந்த “காந்தளகம்” - இந்நூலை வெளியிட எல்லா உதவிகளையும் செய்த “குங்குமம்” துணை ஆசிரியர் பாவைசந்திரன் மற்றும் குங்குமம் பதிப்பகத்தார் - நூலை சிறப்பான முறையில் அச்சிட்ட சிவகாசி சீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் ஆகிய அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

இந்த நூல் இலக்கிய ஆர்வமுள்ள தமிழ் மக்கள் கைகளிலே தவழும்போது, எங்களுக்குள்ள மகிழ்வு யாவருக்கும் உண்டு என்பதை எங்களால் உணர முடிகிறது! வணக்கம்!

சென்னை - 83
1-7-87

ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்

பக்க நிலை

அச்சு உரையற்ற வெற்றுப் பக்கம்.

# சங்கத் தமிழ்

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்