பிரிவு 7 / 11

ஒருதலைக் காதல் — 7

One-Sided Love — 7

X
மெல்லக் கண்ணிமைகள் விரிந்து கருவிழிகள்மலர்ந்தபோது; தன்இல்லத்துக் கட்டிலிலே நற்கண்ணை; தானிருப்பதுணர்ந்தாள்!மேகத்தின் குழலுக்குள் மறைந்திருக்கும் கதிரொளிபோல்சோகத்தின் ஆழத்திலிருந்து கண்ணொளியைப் பாயவிட்டு,தன்னருகே குனிந்து நின்ற பொற்கொடியை உற்று நோக்கி,“தாய் தந்தை எங்குற்றார்?” எனக் கேட்டாள்!
“தலைவெடித்து விட்டதுபோல் ‘தாம்தூம்’ எனக் குதித்து,தன்மானத்தை விலை கூறிவிட்டாரே என்று;தந்தையைக் கடிந்துகொண்டு - இனித்தாமதித்தல் இவ்வூரில் ஒருகணமும் கூடாதென்று,பொங்குற்றே உன் தாயார் புறப்பட்டுப்பூம்புகார் நோக்கிப் போய்விட்டாள்!இங்குற்ற அவமானத்தால் தலைகுனிவு வந்ததென்று,இடிந்து போயிருந்த தந்தை; உன் தாயைத் தொடர்ந்துஓடிந்து போன அவள் இதயத்தை ஒட்டவைக்கச்சென்றுவிட்டார்”
பொற்கொடியாள் சொன்ன தகவல் கேட்டு நற்கண்ணை;விற்புருவம் மேலுயர்த்தி, “வீணாக நான் மட்டும் ஏன்வாழவேண்டு”மென்றாள்!
“உயிரினுமினிய தமிழ்மொழியை வாழவைக்கஉனைப்போன்றோர் ஓராயிரம் ஆண்டுவாழத்தான்வேண்டும்!”
என்ற குரல் கேட்டு ஏந்திழையாள் திடுக்கிட்டாள்!அந்தக் குரலுக்குரியோன் நற்கிள்ளி என்றபோது;எதிரே காணுகின்ற காட்சி மெய்தானா என்று -எழில் விழிகள் இரண்டின் இமைக்கதவு படபடக்க;“எந்த உலகில் இருக்கின்றேன் நான்?” என்றுசொந்தக் கண்களையே நம்பாமல் கேட்டுக்கொண்டாள்!‘இந்த உலகில் இனி நமக்கென்ன வேலை’யென்றுஇருவரையும் தனிவிடுத்துத் தோழி மெதுவாக நகர்ந்துவிட்டாள்
நற்கண்ணை நிலையோ இங்கு;நாற்புறங்களில் எல்லாம் இசையரங்கு!‘இரக்கம் பிறந்ததா என்னிது?’ என்று எழும்பிக் கேட்டன விழிகள்!‘உருக்கம் சுரந்ததா என்பால்?’ என்று துடித்துத்தவித்தன இதழ்கள்!‘மகுடமொன்றைத் தலைக்கு அணியும் மன்னவன்மகனே! - நான்மகுடமிரண்டை மார்பகத்தில் தாங்கி நிற்பதும்;முடிகூட மறத்திடல் ஏனோ?’ என்றுகொடிப்பிடையாள் கேட்கவில்லை! அஃது அவள்;முறுவலிலே ஒளிந்திருந்த மெளன வினா!
நிலைகுலைந்து நிற்கின்றாள் நேரிழையாள் எனக் கண்டும்அலைகடலின் கொந்தளிப்பை அடக்குதற்கு முனையாமல்;“நான் வந்திருக்கும் நோக்கம் புரிந்ததா?” என்றான்!
அவள்:-“தேன் இனிக்கும்! தேளின் நஞ்சு கடுக்கும்!தேடி, இவையிரண்டில் எதை எனக்குஅளிக்கப் போகின்றீர்?
வான் பார்த்து ஏங்குகின்ற உழவனுக்குவறண்ட காற்றுத்தான் வெகுமானமா? அன்றிவளம் சேர்க்கும் மழையெனும் அமுதபானமா?கூன்பிறை வளர்ந்தொரு முழுமதியாகுமா? - அன்றிக்கும்பிருட்டே என் வாழ்க்கு வகுத்த விதியாகுமா?”
அவன்:-“மாம்பழச்சாறு நிகர் தமிழைத்தான்மங்கையுன்பால் நான் கேட்டு மகிழக்கூடும்!மாம்பழ மேனியின்பால் எனக்கு நாட்டமில்லை! உன்மாத்தமிழ்த் திறன் போற்றும் மனமுண்டு எனக்கு!”
அவள்:-“திறனைப் புகழ்ந்தமைக்கு மிக நன்றி; அந்தத்திறனிருக்கும் ஆரணங்கின் காதலுக்குத் தீவைப்பதுநன்றா?”
அவன்:-“இருதரப்பின் இதயப்பரிமாறலே காதலுக்குஇலக்கணமாம்!ஒருதரப்பின் ஆசைக்கும் அதுதான் இலக்கணமா?”
அவள்:-“பார்க்கின்ற முல்லைக்குப் பரிவு காட்டாமல்இடர்தந்து புறக்கணித்தல் பாபமன்றோ?”
அவன்:-“பாரி மன்னன் தேர்; முல்லைக் கொடியொன்றுபடரத்தான் பயன்பட்டதேயன்றி;
பரவிடும் மலரின் மணத்தை - அந்தமரத்தேர் நுகர்ந்து மகிழ்ந்ததும் உண்டோ?பாவை நீ என்பது படர்வதென்றால் - நான்பாரியின் மரத்தேராய் இருந்தென்ன பயன்?”
அவள்:-“நாடாளும் மன்னனின் மைந்தர்தானே -காடாளும் மாமுனிவர் அல்லவே நீர்!”
அவன்:-“மாமுனிகளும் மாதர் மடி வீழ்வதுண்டு -மறைமுகமாய் மதனன் கலை பயில்வதுண்டு!மன்னர்மகன் நான்; உண்மைதான்!மண் வளைக்கக் கொண்ட ஆசை;பெண்ணின் இடை வளைக்கக் கொண்டேனில்லை!”
அவள்:-“வாளுறையுடன்தான் உறங்குவேன் எனும், தலைவ!சூளுரையொன்றுரைப்பேன் அறிக!வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன்! அன்றிவீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்!”
அவன்:-“கார்கால இடியைப்போல் முழங்குகின்றகவிப்பாவாய்; நீ சொன்ன இரண்டுமே நடக்காது!போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்பூவிதழை அல்ல! அல்ல! இதுவும் உறுதி!
அஃதேபோல் அவ்வாளால் உனுயிரைஅழிக்கமாட்டேன் அதுவும் உறுதி!வருகின்றேன்; என்னை மன்னித்துவழியனுப்பி வைத்திடுக!”
இவ்வாறு கூறிவிட்டு,விழியழகி நற்கண்ணை விடையளிப்பதற்குக் காத்திராமல்விரைந்து வந்து வீட்டோரம் நின்றிருந்த தேர் ஏறிஅமர்ந்து கொண்டான்.தொடர்ந்து வந்த துடியிடையாள் - தேரின்தூண் ஒன்றைப் பற்றிக்கொண்டு - “உமைப்படர்ந்து தழுவத் தாவுகின்ற - இளம்பருவக்கொடிதான் வதங்குவதோ?” என்றழுதாள்!
“உறையூர்க்கு அவசரமாய்ப் போகின்றேன் இன்று!ஓரிருகிழமைகள் திரும்புகின்றேன் இங்கு!உன்னோடு உரையாட நேரமில்லை இப்போது;உளம் திறந்து முழுமையாகப் பேசலாம் அப்போது!” என்றான்.
தட்டிக் கழிக்கின்றான் எனத் தெரிந்துகொண்டு - தேரில்முட்டிக் கொண்டழுதவாறு நற்கண்ணை;“தலைவனே! உமக்காகத் தவமிருக்கும் என்னுள்ளத்தில்அலைபாய்ந்து ஒலிக்கின்ற பாடலைக் கேள்” என்றாள்;- பாடினாள்!
★ “இறாமனின் உடல்போன்றுச் சொரசொரப்புக் கொண்டசுறாமீனின் முகத்தில் நீண்ட கொம்புகள் போல்முட்கள் குத்தும் இலைகள் நிறை தாழை மரங்கள்முதுயானைத் தந்தம்போல் அரும்பு முதிர்ந்து
மாண்களிலே பெண்ணினம்போல் தலைசாய்த்துமணங்கமழச் செய்கின்ற மகிழ்ச்சி குவங்கும்விழாக்களங்கள் அமைந்துள்ள கடற்பரப்பிலும்,வெற்றிக்கொடி நாட்டுகின்ற வீரர்குலத்தலைவா!மணிகள் அசைந்தாடும் உன் நெடுந்தேரை; உன்பால்பணிபுரியும் தேர்ப்பாகன் விரைந்து செலுத்திட; நீயோஒருசில நாள் கழித்து வருவேனென்றுஒதுகின்றாய் எனக்கு!உனைப்பிரிந்து ஒருநாளும் இனிஉயிர்வாழமாட்டாள் இவள் என உணர்க!”
நற்கண்ணையின் சோக இசையினூடே; வீட்டோரம்,நகர்ந்து கொண்டிருந்த அந்தத்தேர்;நற்கிள்ளி ஆணை கேட்டு நாலுகால் பாய்ச்சலில்நடுவீதியிற் பறந்து மறைந்தது ஓர் நொடியில்!புரவிகள் எழுப்பிய புழுதித்துகளைப்பொருட்படுத்தாது பின்தொடர்ந்தவளைப்பொற்கொடி வந்து தடுத்தும் பயனில்லை! அவளோபுலம்பிடும் சிலம்புடன் ஓடுகின்றாள்!
★ “இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழைபெருங்களிற்று மருப்பி னன்ன அரும்பு முதிர்புநன்மான் உழையின் வேறுபடத் தோன்றிவிழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப!இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்செலீ இய சேறிஆயின்; இவளே
வருவை ஆகிய சிலநாள்வாழா ளாதல்நற்கு அறிந்தனை சென்மே!”
(நற்றிணை: பாடல்: 19பாடியவர்: நற்கண்ணையார்)
பொருள் விளக்கம்:இறவு = இறாமீன். சுறவு = சுறாமீன். பிணர் = சொரசொரப்பு.மருப்பு = யானைத்தந்தம். நன்மான்உழை = நல்ல பெண்மான்.உரவுநீர் = கடல். செலீஇய சேறிஆயின் = செலுத்திடச் செல்வாயானால்.
♦ ♦ ♦

மூலமும் சான்றும்