மூல அமைப்பு அலகு 7 / 7
Front yard, Kamala, உதயசூரியன் கோலம், close
இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல.
மூல ஸ்கேன் 47, 48
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
தேசீயம்பிள்ளை வாயிற்புறம் வந்தார். டிரைவரைக் கூப்பிட்டு அவசரமாகக் காரை எடுக்கச் சொன்னார். கார் வந்து நின்றது. அவரது மகள் தெருவிலே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
கமலா! கமலா இன்று மாலைப் பொதுக்கூட்டத்தில் நீ பாடவேண்டும்!-என்று உரக்கச் சொன்னார்!
ஓ பாடுகிறேன்—எந்தக் கூட்டத்திலப்பா! என்று குனிந்திருந்த கமலா நிமிர்ந்தாள். வாசலில் அவள் போட்ட கோலம் தேசீயம் பிள்ளையின் கண்ணில்பட்டது. வழக்கமாகக் கமலா போடும் கோலமல்ல அது! புதிய கோலம்!
உதயசூரியன் கோலம்
தேசீயம்பிள்ளை திகைத்து நின்றுவிட்டார்.
அம்மாவிடம் சொல்லிவிடு, அப்பா ஊட்டிக்குப் போகிறார் என்று!
இதைக் கூறிவிட்டு அவர் காரில் ஏறி உட்கார்ந்தார். கார் புறப்பட்டது.
கோலத்தைப் பார்த்துக்கொண்டே கமலா நின்றாள். அம்மா வெளியே வந்தாள் மகள், தந்தை சொன்ன செய்தியைச் சொன்னாள்.
“என்ன செய்வது மகளே! காங்கிரஸ் கட்சி மலையேறும் காலம் வந்துவிட்டது!”
—என்று தேசீயம் பிள்ளையின் மனைவி, பதில் கூறிவிட்டு கார் போன திக்கு நோக்கி நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தாள்.