மூல அமைப்பு அலகு 1 / 7
Yama court / Desiyampillai entrance
இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல. இப்பகுதி ஆவணப்படுத்தப்பட்ட மூலச் சேதத்தைக் கொண்டுள்ளது; `[paper loss]` / `[unresolved …]` குறிகள் மூலத்தின்படியே காட்டப்படுகின்றன; எதுவும் மீட்டமைக்கப்படவில்லை.
மூல ஸ்கேன் 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
திருவாளர்
தேசீயம் பிள்ளை
எமதர்ம ராஜனுடைய தர்பார் [paper loss]கிறது. எலும்பு அங்கிகளே அணிந்த வீரர்கள் இரு [paper loss]ங்களிலும் அணிவகுத்து நிற்கிறார்கள். கபால ஓ[paper loss]களில் தோரண விளக்குகள் கொலுமண்டப மெங்கும் ஏற்றி வைக்கப்பட்டு ஒளி மங்கி விடாமல் தூண்டி விடுவதற்காக அடிக்கடி மனிதக் கொழுப்பு வார்க்கப்பட்டு நரம்புத் திரிகளும் இடப்படுகின்றன. ஒரு பயங்கரமான உருவம் தலையை மேலே தூக்கி விழி பிதுங்குவது போல உரத்த குரலெடுத்து ‘அய்யோ! அய்யோ!!,’ என்று கத்துகிறது. அது தான் சபைக்கு மன்னன் வருவதை அறிவிக்கும் ஒலிக் குறிப்பு!
அந்த ஒலியை அடுத்து நான்கு எருமை மாடுகள் பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபோட்டு வருகின்றன. அதற்கடுத்து, எமதர்மன் இரண்டு மூடர்களின் தோள்மீது உட்கார்ந்து கொண்டு பிரேதங்களால் அமைக்கப்பட்ட ஆசனத்தின் பக்கம் வந்து இறங்குகிறான்.
சபையில் ஒரே ஆரவாரம்— ‘அய்யோ’ என்ற மகிழ்ச்சிகரமான வரவேற்பு ஆஸ்தானப் புலவர்; கவிஞர் ஒப்பாரி எழுந்து வாழ்த்துக் கீதம் வழங்குகிறார். அடுத்தாற்போல் கொள்லிச்சட்டி நடனம் ஆரம்பமாகிறது. வடிவழகிவாய்க்கரிசி தலைமை ராஜநர்த்தகியாக நடனத்தில் பங்கு கொள்கிறாள். ரத்தத்தால் சிவப்பாக்கப்பட்ட உதடுகளையும் மீறிக் கொண்டு வெளியே தல நீட்டியிருக்கும் ஆனத் தந்தம் போன்ற பற்களின் ஒளி[paper loss]மென், உள்ளத்தைப் பறிகொடுக்கிறான். நடன[paper loss]ர் ஒவ்வொருவரையும் பாசக் கயிற்றால் பிணை[paper loss] கழுவிப் பரிசளித்து அனுப்பி வைக்கிறான்.
கொலுமண்டபத்து நித்திய நிகழ்ச்சிகள் துவங்கப்படுகின்றன,— என்று சித்திராபுத்திரன் அறிவிக்கிறான்.
மன்றத்து பிரதானியர் அனைவரும் தங்கள் தங்கள் பாடையில் பேசுகிறார்கள். (பாடை என்பது இங்கே பாஷையைக் குறிக்கும்)
எமலோகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருப்போர் தங்கள் குறைகளைத் தெரிவித்து கொண்டு போது எமதர்ம ராஜன் சற்றுக் கண்ணயர்ந்துவிடவே அருகேயுள்ள சித்திராபுத்திரன் அவனை எழுப்பிவிட்டு அவையினரின் பாராட்டைப் பெறுகிறான். மன்னனின் விசாரணை ஆரம்பமாகிறது.
எமன்: இதுவரையில் மன்றத்துப் பிரதிநிதிகளின் பேச்சுக்களைக் கேட்டேன். சுடுகாட்டில் இருக்க வேண்டிய நீங்கள் இந்தச் சபைக்கு வந்து ஏன் என் உயிரை வாங்குகிறீர்கள்?
ஒருபிரதிநிதி: ஒழுங்குப் பிரச்சினை! சபாநாயகர் அவர்களே! உயிர் வாங்கும் வேலை மன்னருக்குத்தான் உரியதே தவிர எங்களுக்கல்ல.
எல்லோரும் சபாநாயகரின் இருப்பிடத்தைப் பார்க்கிறார்கள். அவர் அன்று சபைக்குத் தாமதமாகத்தான் வருவார் என்று சித்திராபுத்திரன் அறிவித்து விட்டவே ஒழுங்குப் பிரச்சினை கைவிடப்படுகிறது. மீண்டும் எமனின் விசாரணை தொடர்கிறது.
எமன்: நான் பேசும்போது யாராவது குறுக்கே பேசினால் மீண்டும் உங்களுக் கெல்லாம் உயிர் கொடுத்து, பசி, பிணி, கஷ்டம், துக்கம் முதலிய உணர்ச்சிகளை உண்டாக்கி விடுவேன். எமலோகத்திலே குடியேறியிருக்கிற உங்களை யெல்லாம் மறுபடியும் பூலோகத்துக்குத் துரத்தி அங்கு கஷ்டப்படாமல் காப்பாற்றி வருகிறேனே, அந்தக் காவாவது நீங்கள் எனக்கு அடங்கி நடக்க வேண்டாமா?
ஒரு குரல்: ஒருவாறு அடங்கி நடப்பது என்பது சர்வாதிகாரமல்லவா? எங்கே ஜனநாயக[paper loss] எங்கே ஜனநாயகம்?
எமன் மிகவும் ஆத்திரத்துடன் எழுந்து ஒரு பிரதிநிதியின் தலையை நறநறவென்று மென்று தின்றுவிட்டு ஏப்பம் விட்டவாறு,
யாரடா அது; தடுத்தும் கேளாமல் தகாத வார்த்தை பேசுவது? ஒழுங்காக யிருக்கிறீர்களா? அல்லது உயிர்கொடுத்து உங்கள் தாய் உலகத்துக்குத் திருப்பி அனுப்பிவிடவா?
எல்லோரும்: வேண்டாம்பிரபு! ஒழுங்காயிருக்கிறோம்!!
எமன்: உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் எல்லாம் குடியேறியவர்கள் என்பதை மறந்துவிட்டு இந்த நாட்டிலேயுள்ள பேய்களும் பிசாசுகளும் உங்களுக்கு பொதுத் தேர்தலிலே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும். போகட்டும் சித்திராபுத்திரரே! இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைச் சபையின் முன்னே படித்துத் தொலையும்.
சித்ரா: படித்துத் தொலைக்கிறேன் மன்னவா!
ஒரு பிரதிநிதி: (நடுக்கத்தோடு எழுந்து) தாம்பிரபு! நிதிநிலை அறிக்கையின் பிரதிகள் எங்களுக்கு தரப்பட்டிருக்கிற காரணத்தால் நாங்களே படித்துத் தெரிந்து கொள்கிறோம். சித்திராபுத்திரரைப் படிக்கச்சொல்லி நேரத்தை வீணக்க வேண்டாம் என்பது எங்கள் தாழ்மையான விண்ணப்பம்.
எமன்: சரி! உருப்படியான யோசனை! ஏற்றுக் கொண்டேன். நிதிநிலை அறிக்கையின் முக்கியக் குறிப்புகள் மட்டும் உங்களிடம் சுருக்கமாகச் சொல்லுகிறேன். சென்ற ஆண்டு நமது நாட்டில் உயிர் ஏற்றுமதி சற்றுத் தாராளமாக இருந்தது. இந்த ஆண்டு இந்தியத் துணைக் கண்டத்திலும் குடும்பக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டு விட்டதால் இங்கு தேங்கிக் கிடக்கும் உயிர்களை அதிக அளவு ஏற்றுமதி செய்ய இயலவில்லை. இதனால் அரசினருக்குச் சொல்ல முடியாத நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது; இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய வழி காண வேண்டும்.
ஒரு பிரதிநிதி: இனியும் உயிர்கள் மேலும் மேலும் கொண்டு வராமல் இருந்தால் என்ன?
எமன்: நல்ல கேள்விதான். ஆனால் கேள்வி கேட்கும் உறுப்பினர் பிரம்மச்சாரி மட்டுமல்ல; அவருக்குப் பூவுலகில் உற்றார் உறவினர், அக்காள் தங்கை, அண்ணன் தம்பி, யாருமே இல்லை. தாயும் தந்தையும் மட்டும்தான். அவர்கள் முன்னமே இங்கு வந்து விட்டார்கள். ஆனால் மற்ற உறுப்பினர்கள் அப்படி அல்லவே! எங்கள் சொந்தக்காரர்களை எப்படியாவது அழைத்து வந்து விடுங்கள் என்று பலமான சிபார்சுகளுடன் விண்ணப்பம் போட்ட வண்ணமிருக்கிறார்களே!
இந்த நிலையில் நமது ராச்சியத்துக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
ஒரு குரல்: வரிபோடலாம்?
எமன்: யாரது? வரிபோடுவதா? இதுவரையில் அப்படி ஒரு வார்த்தையை இந்தச் சபை கேட்டதே கிடையாதே. வரி! வரி!! வரி!!! புதுமையான வார்த்தை! இந்த வார்த்தையைச் சொன்னவர் யார்? எழுந்து நில்லுங்கள் பார்க்கலாம்?
(ஒரு பெரிய உருவம் கதராடையும் கதர்க்குல்லாயும் அணிந்து எழுந்து நிற்கிறது)
எமன்: நீ யார்? இந்தச் சபைக்கு எப்படி வந்தாய்?
கதர் உருவம்: என் பெயர் தேசீயம்பிள்ளை! மேலே பார்வையாளனாக வந்து உட்கார்ந்திருந்தேன்! நீங்கள், நாட்டுப் பொருளாதாரம் செழிக்க வழி கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டு கீழே குதித்து விட்டேன்; மன்னிக்கவும்.
எமன்: சபையின் கெளரவத்தையே குலைத்திருக்கிறாய் அதுமட்டுமல்ல; என் உத்திரவில்லாமல்—எங்கள் நாட்டு அனுமதிச் சீட்டுப் பெறாமல் எம் ராச்சியத்தில் அத்து மீறிப் பிரவேசித்திருக்கிறாய்! ஒரு வேளை நீ கள்ளத் தோணியிலேதான் வந்திருக்க வேண்டும்! உன்னைச் சும்மா விட்டுப்போவதில்லை “வரி” என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித் தீர வேண்டும்.
தேசீயம் பிள்ளை: பிரபு! நீங்கள் என்னைச் சாதாரணமாகக் கருதக் கூடாது—உங்களுக்கு எருமை வாகனமென்றால் எனக்குக் காளைமாட்டு வாகனம்— ஏறத்தாழ இருவரும் ஒரே மாதிரி! அது மட்டுமல்ல; நான் பிறந்த வருஷம் 1885! இத்தனை ஆண்டுகளாக இங்கு வந்து தங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று எத்தனையோ முறை முயன்றேன்; முடியவில்லை, இதோ—அதோ இன்றைக்கு நாளைக்கு என்று ‘கெடு’ கூட வைத்துவிடுவேன். திடீரெனக் கடைசி நேரத்தில் எப்படியோ பயணம் ரத்தாகிவிடும். நான் செய்த பாக்கியம் தங்கள் தரிசனம் கிடைத்தது. அய்யன்மீர்! என் சிறிய தந்தை மகாத்மா காந்தி இங்கே வந்தாராமே; அவர் இப்போது எங்கே இருக்கிறார்?
எமன்: ஓகோ, நீ காந்திக்கு மகன் முறையா? அந்தக் காந்தி நம்மை அவமதித்துப் பேசிய காரணத்தால் ‘சொர்க்கம்’ என்னும் படுபாதாளச் சிறையில் போட்டுப் பூட்டிவைத்திருக்கிறேன். அவரை நீ இப்போது பார்க்க முடியாது! இதோ உன்னையும் கைது செய்து என் அரசாங்கப் பாதுகாப்பு கைதியாக—மரியாதைகள் எதுவும் குறையாமல் என் மாளிகை விருந்து விடுதியில் தங்கவைக்கப் போகிறேன். நாளைய தினம் நமது பேட்டி. அப்போது ‘வரி’ என்ற வார்த்தையைப் பற்றி விவாதிப்போம். அதன் பிறகு உனக்குரிய தண்டனை வழங்கப்படும்.
தேசீயம் பிள்ளை: தண்டனையா?
எமன்: ஆமாம்—நமது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பெரும்பான்மையோர் கருத்துப்படி தண்டனை வழங்கப்படும்.
தேசீயம் பிள்ளை: ஓகோ, இங்கும் ஜனநாயக ஆட்சி தானா?
எமன்: கிட்டத்தட்ட உங்கள் நாட்டைப் போலத்தான், எல்லாம்.
உங்கள் நாட்டில் சபாநாயகர் குறித்த காலத்தில் வரவேண்டும். எங்கள் ராச்சியத்தில் வந்தாலும் வரலாம்—வராவிட்டாலும் பரவாயில்லை மற்றபடி எல்லாம் ஒரே மாதிரி ஜனநாயகம்தான்! உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளாத ஒரே ஒரு விஷயம் “வரி” என்றுமே அதுதான்!
தேசீயம் பிள்ளை: அதையும் நாளைக்கு விளக்கி விடுகிறேன்.
எமன்: சந்தோஷம்! காவலர்களே! இந்த உயிர் பிராணியைக் கைது செய்து நமது உல்லாச மண்டபத்தில் பாதுகாப்பில் வை!
தேசீயம் பிள்ளை: உல்லாச மண்டபமா? அப்படியானால் உதகை மண்டலமா?
எமன்: அதே போலத்தான்! உங்கள் உதகை மண்டலத்தில் பனிக்காற்று வீசும்! இங்கே நறுமணமிக்க பிணக்காற்று வீசும்! அனுபவித்துப் பாரும்! இரண்டுக்கு முள்ள வித்தியாசம் தெரியும்—எய்! அழைத்துப்போ! நாளைக்கு சந்திக்கிறேன்!
(தேசீயம் பிள்ளை அழைத்துச் செல்லப்படுகிறார். சபாநாயகர் வருகிறார். சபை மறுநாள் காலைவரை ஒத்தி வைக்கப்படுகிறது)