பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 1 / 38

காட்சி-1

வஞ்சி மூதூரில் முரசறைதல்

மூல ஸ்கேன் 17

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[சேர நாட்டுத் தலை நகரான வஞ்சி மூதூரில் இளவரசன் செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவுக்கான அறிவிப்பு!....ஆனையின் மீது முரசறைவோன் அமர்ந்திருக்கின்றான். ஆனையை அழகுபடுத்தியிருக்கும் நெடிய ஆடையில் வில் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் முகத்தில் தொங்கும் வேலைப்பாடமைந்த துகில் மீதும் வில் சின்னம் காணப்படுகிறது. அசைந்தாடி வரும் ஆனை வஞ்சித் தலைநகரின் வீதிகளிலே புதிய எழுச்சியைத் தோற்றுவிக்கிறது. முரசறைவோன் செய்தியை முழக்குகிறான் பூரிப்போடு!]

முரசறைவோன் : வாழ்க தமிழ்! வெல்க தமிழகம்! இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க இமயம் சென்று விற்கொடி. நாட்டிய வீரர் பெருந்தகை சேரர் தலைவர் நெடுஞ் சேரலாதர் அன்புத் திருமகனும் ஆற்றல் மிகு வீரரும் செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவை இன்று சேர மண்டலமெங்கும் சிறப்புறக் கொண்டாடக் கொட்டுவோம், கொட்டுவோம் முரசம்! வாழ்க இளவரசன் செங்குட்டுவன்! வாழ்க சேரர் தரணி! வாழ்க செந்தமிழர் தாயகம்!

[முரசு முழங்குகிறது]