நகைச் சுவைப் பகுதி. · காட்சி 3 / 3
முதன்மை நாடகத்துக்குப் பின் மூலம் தனித் தலைப்புடன் அச்சிட்டுள்ள பகுதி: நகைச் சுவைப் பகுதி. இதன் காட்சிகள் 1 முதல் 3 வரை தனியாக எண்ணிடப்பட்டுள்ளன; இவை முதன்மை நாடகத்தின் தொடர் எண்கள் அல்ல.
காட்சி 3
நகைச் சுவைப் பகுதி. · காட்சி 3
இடம்:- சந்தேகம் வீடு.
மூல ஸ்கேன் 128, 129, 130
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(பெரிய குதிர், கோழி, ஏர், கலப்பை, விரட்டி அடுக்கு. கோழியை வைத்துக்கொண்டு "புறாப் பாட்டு" மெட்டில் கோழியால் தப்பித்ததை சமயோசிதமும், அதிர்ஷ்டமும் பாடிக் கொண்டிருக்கையில், சந்தேகம் கதவைத் தட்டிக் கூப்பிடுகிறான். அதிர்ஷ்டத்தைக் குதிரில் ஒளியவைத்துக் கதவைத் திறக்கிறாள்)
சந்:- சாவித்திரி!
சம:- ஏன் சத்தியவானே?
சந்:- இந்தக் குதிரை வித்துட்டுப் பெரிய குதிர வாங்கணும்னு சொன்னில்ல!
சம:- ஆமாம்!
சந்:- இதை வில பேசி முடிச்சிட்டேன். வாங்கிறவன் வெளியே நிற்கிறான். இப்ப இதைத் தூக்கியாணும்.
சம:- உங்களுக்கு முன்னேயே நான் வேறே ஆளுகிட்டே வித்துப்பிட்டேன். ஓட்டைக்கட்டை இருக்கான்னு உள்ளே இறங்கி பார்த்துக்கிட்டு இருக்காரு! (குதிரிடம்) என்னங்க! இன்னுமா பார்க்கிறீங்க?
அதி:- இல்லை...பார்த்தாச்சு. (வெளியே வந்து) குதிரு நல்ல வசதியான குதிரு. இது இல்லேன்னு உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே?
சம:- ஆமாம்! (அவனிடம் கேட்கிறாள்) வசதி ரொம்பத்தான்! ஆறு ரொம்பச் சின்னது. இதைவிடப் பெரிசா இருந்தாதான் ஒரு ஆளு கஷ்டமில்லாமே உள்ளே இறங்கலாம்
சந்:- இறங்கக் கஷ்டமே இல்லியே. நான் எத்தனையோ தடவை எறங்கி நெல்லு தள்ளியிருக்கேனே.
அதி:- நெல்லு தள்ள இறங்கலாம்...
சந்:- இந்தா பாருங்க! எவ்வளவு தாராளமா இறங்க முடியுதுன்னு!
(இறங்குகிறான். அவன் குதிரில் இறங்கியதும் அதிர்ஷ்டம் சமயோசிதத்தை அணைத்துக் கொள்ளுதல்)
சந்:- (உள்ளிருந்து) எப்படியிருக்கு பாத்தீங்களா குதிரு, வழ வழன்னு?
அதி:- (சமயோசிதத்தின் கன்னத்தைத் தடவி) ஆமாம் கண்ணாடிமாதிரி இருக்கு!
சந்:- (உள்ளிருந்து) இதுக்கு ஒரு குத்தம் சொல்ல முடியாதுங்க.
அதி:- (அவளை அணைத்தபடி) முடியாது, முடியாது. குத்தம் சொல்றவன் முட்டாள்.
சந்:- அதிர்ஷ்டமான சாமான். நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும். மதிப்பில்லாதது; எவ்வளவு சித்தடக்கமா எவ்வளவு லட்சணமா இருக்கு பாத்தீங்களா?
அதி:- ஆமாம். இந்த லட்சணந்தானே, என் மனசைக் கவருது.
சந்:- இந்தக் குதிரிலே நெல் எடுக்க எடுக்கக் குறையாதுங்க. இது உங்களப்போல கூட்டாளிகளுக்குக் கட்டாயம் இருக்கணும்.
அதி:- அதுக்குத்தானே வந்தேன். இது நம்ப வீட்டிலே இருந்தா, அப்புறம் கவலையே இல்லை.
(அவனை நோக்கிச் செல்கிறாள்)
சந்:- அப்ப; நீங்களே எடுத்துக்கிறீங்களே?
அதி:- ஆகா, ஆகா! நீங்களே கொடுக்கும்போது.
சந்:- குதிரு விலையிலே மட்டும் குறைக்காதீங்க.
அதி:- வில கிடக்குதுங்க, வில! விரும்புன சாமான் கிடைச்சா சரி!
சந்:- அப்ப தூக்கிக் கொள்ளுங்க!
(அதிர்ஷ்டம் சமயோசிதத்தை தூக்கிக்கொண்டு மெய்மறந்து ஆடுகிறான். இருவரும் ஆனந்தத்தில் இருக்கின்றனர். சந்தேகம் குதிருக்குள் வெளியே தலையை நீட்டுகிறான்)
[முடிவில் சமயோசிதம் குஷ்டரோகி ஆகிறாள். தன் கேவல நடத்தையை நினைத்து வருந்துகிறாள்.......... துறவியான சித்ராவைச் சந்தித்து....... அவள் வழி பின்பற்றுகிறாள்]