பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 45 / 47

காட்சி 45

காட்சி 45

மூல ஸ்கேன் 162

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(மாளிகையின் ஒருபகுதி - உலகப்பன் காவல் புரிந்தபடியிருக்கிறான் - யாரோ வருவதைப் பார்க்கிறான், தனக்குள்)

உல: ஓகோ - அல்லியம்மாளா - காதலரைத் தேடிக் கொண்டு அந்தப்புரத்திற்கே வர ஆரம்பிச்சாச்சா? ஆமாம் - இது எப்பவே பிடிச்சு நடக்குது? அரசர் அவங்ககிட்ட உண்மையைச் சொல்லிவிட்டாரா? இல்லாமலா, அம்மா இங்கேயே வருவாங்க? சரி.. சரி.. நம்ப இங்க இடைஞ்சலா நிற்பானேன்! ஒதுங்கிக்குவோம்!

(போகிறான் அதைவிட்டு. அல்லி மெதுவாக அந்த இடத்தைக் கடந்து மாளிகைப் பக்கம் நுழைகிறாள் - பயங்கர இசை)