பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 37 / 47

காட்சி 37

காட்சி 37

மூல ஸ்கேன் 135, 136

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(தோட்டம் அல்லி - புதுமைப்பித்தன் காதல் கீதம்.)

அல்லி: நேரமாகிறது கண்ணே நான் புறப்பட்டுமா?

புதுமை: நேரம் போனது உனக்கு எப்படித் தெரிந்தது?

அல்லி: பார்த்தீர்களா? ‘காதல் கடலிலேயே மூழ்கி விடக் கூடாது கடமையை மறந்து’ என்று உறுதி எடுத்துக் கொண்டு... நாமே அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்களே!

புது: இல்லை இன்பமே! காதலும் கடமையும் ஒன்றையொன்று பின்னிக் கிடப்பதையே நானும் விரும்புகிறேன். மறக்கவில்லை!

அல்லி: நாமிருவரும் - வெளிப்படையாக - கணவன் மனைவியாக - கடமை புரியும் தம்பதிகளாக வாழும் நாள் எப்போதோ?

புது: விரைவிலே கிடைக்கும் அந்த பாக்கியம்!

அல்லி: கண்ணாளா!

புது: அல்லி - இதயராணி!

அல்லி: என் ராஜா... இதயராஜா! புறப்பட்டுமா?

புது: உயிரை எடுத்துக் கொண்டு செல்வட்டுமா என்று கேள்!

அல்லி: உயிரை இங்கே விட்டு விட்டு செல்வட்டுமா?

(இருவரும் ‘கண்ணே, மணியே’ என்று தழுவியபடி பிரிதல் - அல்லி வர பொன்னழகன் பதுங்கிப் பார்த்தல்)

பொன்: (முணுமுணுத்தபடி) அல்லி தான் அல்லியே தான்.

(அல்லி போய்விடல்.)

பொன்: அவன் யார்? அந்தப் புது மனிதன் யார்? ராஜா என்று கூப்பிட்டாளே - அந்தக் காதல் ராஜா யார்? தெரிந்து கொள்ளாமல் திரும்ப மாட்டேன்...

(அவன் புதுமைப்பித்தனை தொடருகிறான்.)